ஷட்கர்மா மற்றும் பிராணாயாமம் – அர்த்த பத்மாசனம்
அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து பிராணயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சியான கபால பாத்தியும் அதன்பிறகு பிராணாயாமப் பயிற்சிகளையும் செய்யவும்.
ஆசனப் பயிற்சிகளை முடித்த பிறகு தியான ஆசனத்தில் அமர்ந்து இரண்டொரு நிமிடங்கள் ஓய்வு பெறவும். பிராணாயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சிகளை செய்வதற்கு பயனுள்ள எளிய தியான ஆசனம் மற்றும் தியான ஆசனங்களுக்குரிய முத்திரை இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தியான ஆசனங்களில் அமர்ந்து பிராணயாமம் மற்றும் ஷட்கர்மா பயிற்சியான கபால பாத்தியும் அதன்பிறகு பிராணாயாமப் பயிற்சிகளையும் செய்யவும்.
பெயர் விளக்கம் : ‘அர்த்த’ என்றால் பாதி. இந்த ஆசனம் பத்மாசனத்தின் பாதி நிலையாக இருப்பதால் அர்த்த பத்மாசனம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை : முதலில் தண்டாசனத்தில் அமரவும் பிறகு இடது காலை மடக்கி உள்ளங்காலை வலது தொடையின் அடிப்பகுதியில் சேர்த்து வைக்கவும். வலது காலை மடக்கி இடது தொடையின் மேல் வைக்கவும். இரண்டு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். முழங்கைகள் சற்று மடங்கிய நிலையில் இருக்கட்டும். முதுகு, கழுத்து, தலை, ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்த்திக் கொள்ளவும் தடைக்குறிப்பு:- இடுப்பு சந்துவாரம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
பயன்கள் : முதுகெலும்பு நேராக நிமிர்ந்து நிற்பதாலும் கால்கள் அழுத்தப்படுவதாலும் உடலின் கீழ் பகுதியிலிருந்து மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் ஏற்பட்டு சுறுசுறுப்பு அதிகரிக்கும்.