புதியவைமருத்துவம்

கோடை வெப்பத்தை தணிக்கும் முறைகள்

கோடை காலம் நமது சக்தியை இழக்கச் செய்யும் காலம். வியர்வை காரணமாகவும் நீர்சத்து மிகவும் குறைந்துவிடும், நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

கோடை காலம் நமது சக்தியை இழக்கச் செய்யும் காலம். வியர்வை காரணமாகவும் நீர்சத்து மிகவும் குறைந்துவிடும், நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். நீர்ச்சத்தை அதிகம் இழந்தால் சிறுநீரகம் செயல்படுவது பாதிக்கப்படும்.

கோடையில், காலையில், மயங்கி விழுந்தனர் என்றெல்லாம் செய்திகளைப் பார்க்கிறோம். கடுமையான வெயில் நேரத்தில் வெளியே நேரடியாகச் சூரிய வெப்பம் தாக்குமாறு போகாமல் இருப்பது நல்லது-. கண்களின் பாதுகாப்புக்காக கண்ணாடி அணிவது நல்லது-. மண்பானைகளில் நீர் ஊற்றி வைத்து அருந்துவது நல்லது.
மோர், தர்பூசணி, நுங்கு, இளநீர் ஆகியன உடலைக் குளிர்விக்கும். சாதத்தில் நீர் ஊற்றி வைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரைக் குடிப்பது உஷ்ணத்தைத் தணிக்கும். அத்துடன் மோர் கலந்து கொள்ளலாம். மோர் மற்றும் நீராகாரத்துடன் இஞ்சி, கறிவேப்பிலை, துளி பெருங்காயம், உப்புக் கலந்து குடித்தால் சுவை கூடும்.

கம்பு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். ஆகவே கம்பு சாதத்தில் நீர் ஊற்றி வைத்து மோர் சேர்த்து சாப்பிடலாம். கம்பங் கூழ் செய்து, அத்துடன் மோர் கலந்து குடிப்பது நல்லது.

உடல்சூடு அதிகம் ஆவதால்தான் தோல் நோய்கள், கோடையில் அதிகரிக்கின்றன. ஆகவே உடல் சூட்டைக் குறைப்பது முதல்படி. திட ஆகாரத்தை நிறுத்தி விட்டு, அல்லது குறைத்து விட்டு திரவ உணவுகளை உட்கொள்வது மிக நல்லது. இதையெல்லாம் மறந்து -விட்ட நிலை இன்று!

36000 நோய்களை தண்ணீர் மட்டுமே குணப்படுத்துவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். ஆகவே அடிக்கடி குளிர்ந்த நீர்அருந்த வேண்டும். அதனால்தான் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்த வேண்டும்.

அதுவே உடலைச் சுத்தமாக்கும். 36000 நோயைக் குணமாக்கும் தண்ணீர் சத்தியே! என் உடல் நோயையும் குணப்படுத்து என்று வேண்டி காலையில் தண்ணீர் வெறும் வயிற்றில் அருந்துமாறு சொல்கிறார்கள். தாயைப் பழிந்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று ஒரு பழமொழி இருக்கிறது-.

கங்காமாதா என்று நீரைத் தெய்வமாகக் கொண்டாடும், ஆடிப் பெருக்கின்போது வழிபாடு நடத்தும், நமது மரபு தண்ணீரை வழிபாட்டுப் பொருளாகக் (பஞ்சபூத வழிபாடு) கொண்டாடியதில் வியப்பில்லை.

கங்கையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தும் பேக்டிரியாக்கள் இயல்பிலேயே இருக்கின்றன. கங்கையில் புனிதமாய என்ற சொலவடையே இருக்கிறது. தீபாவளிப் பண்டிகையின் போது ஒவ்வொரு வீட்டுத் தண்ணீரிலும் கங்கை குடியிருப்பதாக ஐதீகம் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வர்.
ஒவ்வொரு வீட்டிலும் கங்கா தீர்த்தம் பூஜையில் இருக்கும். வாழ்வின் இறுதியை எதிர்க்கொள்பவருக்கு அருந்தக் கொடுப்பர்.

இவ்வளவு புனிதமாக நமது மரபுகள் போற்றிய தண்ணீரை எவ்வளவு மாசு படுத்த முடியுமோ அவ்வளவு மாசு படுத்தி விட்டோம். இனி இதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்குபவர்களோடு கை கோர்ப்போம். உற்சாக பானங்கள் அருந்துவதை விட்டு, சுத்தமான தண்ணீர் மட்டும் அருந்துவோம். நமக்கு மட்டுமல்ல எல்லா உயிரினத்துக்கும் தண்ணீர் தேவை. ஆகவே தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்துவோம்.

பழைய காலத்தில் வீடுகளில் தாமிரப் பானைகளில் (தவலை) குடி தண்ணீரைச் சேமிப்பர். தண்ணீர் அருந்தும் செம்பு, டம்ளர் ஆகியவை தாமிரத்தில் இருக்கும்.
தாமிர பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் பிஎச் அளவு &7 ஆக இருக்கும். நமது உடலின் பிஎச் அளவும் அதுவே! இன்று மிகுந்த விலை கொடுத்து நாம் வாங்கிக் குடிக்கும் மினரல் வாட்டர் மற்றும் சுத்தப்படுத்தும் மெஷின்கள் வழியே எடுக்கும் தண்ணீர் ஆகியவற்றில் பிஎச் அளவு – 5 என்ற நிலையில் இருக்கும். அதனால், அதைக் குடிக்கும் போது, நமது உடலின்பிஎச்அளவுகுறையத் தொடங்கும். உடலில் அமிலச்சத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் அமிலத்தன்மை அதிகமாகும் போது நோய்கள் வரும் சூழல்உருவாகும். பிஎச் அளவு (ஆல்கலைன் அளவு) சரியாக இருக்கும் போது நோய்ச்சூழல் இருக்காது.

ஆகவே தாமிரபாத்திரத்தில் வைத்து அருந்துவதும் நல்லதே! நமது உடலில் 80 சதவீத நீர்ச்சத்து என்பர். 100சதவீத தண்ணீரைப் பாதுகாப்போம். பாதுகாக்கப்பட்ட குடிநீரை அருந்துவோம்.

காக்கை குருவி நமது ஜாதி என்று பாரதியார் பாடினார். ஒவ்வொரு வீட்டிலும் திறந்த வெளியில் தினமும் பறவைகளுக்கு உணவு வைப்பதுபோல, தண்ணீரும் வைப்போம்.

வெறும் தேனீ மட்டும் அழிந்து விட்டால் உலகம் 4 வருடத்துக்கு மேல் இயங்காது என்பர். மற்ற உயிரினமும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இயற்கையோடு (பஞ்சபூதம் –  நீர், நெருப்பு, காற்று, பூமி, ஆகாயம்) இணைந்து வாழ்வோம்!



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker