இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா.. அப்போ இந்த பழங்களை மறக்காம சாப்பிடுங்க
பொதுவாக தற்போது இருக்கும் அவசர வாழ்க்கையில் நிறைய பேர் தூக்கம் இல்லாமல் அவஸ்தைப்படுகிறார்கள்.
அப்படியானவர்கள் மருந்து வில்லைகளை எடுத்து கொண்டு தூங்குவதற்கு பதிலாக உணவுகள் மூலம் நிம்மதியான தூக்கத்தை பெற முயற்சிக்கலாம்.
அந்த வகையில், தூக்கம் இல்லாமல் அவஸ்தைப்படுபவர்கள் இரவில் தூங்குவதற்கு முன்னர் சில உணவுகளை எடுத்து கொள்ளலாம்
இது ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி கனவுகள் அல்லாத நிம்மதியான தூக்கத்தை தரும். அப்படியான உணவுகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. வாழைப்பழங்கள் மற்றும் கிவி பழங்கள் இரவில் சாப்பிட்டு விட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். ஏனெனின் இந்த பழங்களில் இருக்கும் செரோடோனின், ஃபோலேட் ஆகியன தூக்கத்தை தூண்டும்.
2. தூக்கமின்மை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பழங்களில் செர்ரிகள் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. ஏனென்றால் தூக்கத்திற்கு தேவையான ஹார்மோனான மெலடோனின் செர்ரிகளில் அதிகமாக உள்ளது. இது நமக்கு தேவையான தூக்கத்தை தருகின்றது.
3. பாதாமில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மெக்னீசியம் மெலடோனின் உற்பத்தியை மேம்படுத்தும். இதன் உற்பத்தி ஆரோக்கியமாக இருந்தால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
4. நிம்மதியான தூக்கத்தை பெற நினைப்பவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவது சிறந்தது. ஓட்ஸில் உள்ள சத்துக்களில் மெலடோன் முக்கியமானது.
5. தூக்கமின்மை பிரச்சினையுள்ளவர்கள் தயிர் சாப்பிடுவது நல்லது. தயிர் சாப்பிடுவதால் தூக்கமின்மை பிரச்சினை நாளடைவில் குறையும்.
6. சிலர் தூங்குவதற்கு முன்னர் இரவில் பால் குடிப்பார்கள். இப்படி வெதுவெதுப்பாக பால் குடிப்பது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும். அத்துடன் பாலில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.