வழுக்கை தலையில் முடி முளைக்க வைக்கும் நெல்லி எண்ணெய்- எப்படி போடணும் தெரியுமா..
- பொதுவாக தற்போது பலருக்கும் இருக்கும் பிரச்சினைகளில் வழுக்கையும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது
சில பல காரணங்களால் சிலருக்கு தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும். இதனை ஆரம்பத்தில் அவதானித்தால் உரிய சிகிச்சை எடுத்து கொள்வது சிறந்தது.
தவறும் பட்சத்தில் காலப்போக்கில் சொட்டை மற்றும் வழுக்கை ஏற்படலாம். வழுக்கை வந்த பின்னர் அதில் தலைமுடியை வளர செய்வது என்பது சற்று கடினமான விடயமாக பார்க்கப்படுகின்றது.
இப்படியான பிரச்சினைகளுக்கு ஆங்கில மருத்துவத்தை விட கையால் செய்து போடக் கூடிய மருந்து சீக்கிரம் நிவாரணம் தரும்.
அப்படியாயின் வழுக்கை விழுந்த இடத்தில் எப்படி இயற்கையான முறையில் தலைமுடியை வளர வைப்பது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. ஆளிவிதை
பொதுவாக வழுக்கை விழுந்தவர்கள் ஆளி விதைகள் 3 மேசைக்கரண்டி எடுத்து 2கப் அளவு நீர் ஊற்றி சூடான பாத்திரத்தில் கொதிக்க வைக்க வேண்டும். இப்படி செய்யும் பொழுது ஜெல் போன்ற அமைப்பில் ஒரு திரவம் கிடைக்கும். அந்த ஜெல்லை தலையில் படும் படி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இப்படி வாரத்திற்கு மூன்று முறை ஆளி விதை ஜெல்லை தலையில் பூசி குளிக்க வேண்டும். இதனை செய்து வரும் பொழுது தலைக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கும். அத்துடன் ஆளிவி தையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அதுவும் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும்.
2. விளக்கெண்ணெய் மற்றும் நெல்லி எண்ணெய்
வழுக்கை பிரச்சினையுள்ளவர்கள், விளக்கெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து படுக்கைக்கு செல்லும் முன்னர் தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்தவுடன் ஷாம்பு போட்டு முடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முடி நன்கு அடர்த்தியாக வளர்வதோடு, வழுக்கை உள்ள இடத்திலும் முடி வளர ஆரம்பிக்கும்.