கோழி ஈரலை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..
மக்கள் அனைவராலும் அதிகமாக விரும்பி உண்ணப்படும் கோழியின் ஈரலை உண்பதால் உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கோழி ஈரலில் தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதை உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தின் ஒரு முறை சாப்பிடுவது நன்மை தரும்.
கோழி ஈரலில் உள்ள இரும்புச்சத்தானது உடலால் எளிதில் உறிஞ்சக்கூடியது. டயட்டில் இரப்பவாகள் இந்த கோழி ஈரலை தாராளமாக உண்ணலாம்.
இதில் புரோட்டீன் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. எனவே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு கோழி ஈரல் மிகச்சிறந்த உணவு.
100 கிராம் கோழி ஈரலில் 116 கலோரிகள் உள்ளன. இவற்றில் 85 புரோட்டீனில் இருந்து நேரடியாக வருகின்றன. எனவே புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுக்க நினைப்பவர்கள் கோழி ஈரலையும் தங்களின் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
இதை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் வேறு எவ்விதமான பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.
இதில் இருக்கும் வைட்டமின் ஏ பார்வைக்கும், நோயெதிர்ப்பு மண்டலத்திலும், இனப்பெருக்க மண்டலத்திற்கும், வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான சத்தாகும்.