நீளமான, அழகான நகங்கள் வேண்டுமா… அப்போ இத செய்தாலே போதும்.
பெரும்பாலான பெண்கள் நகங்கள் குறித்து அதிகம் சிந்திக்கின்றவர்களாக இருப்பதாக உளவியல் ஆய்வு குறிப்பிடுகின்றது. பெண்கள் பொதுவாகவே தங்களின் தகங்கள் நீளமானவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
இப்படி ஆசையாய் வளர்க்கும் நகங்கள் சில நாட்களிலோ, சில வாரங்களிலோ உடைந்து போய்விடுவதை பார்த்து வேதனை அடைபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இது பெண்களால் மட்டுமே உணரமுடிந்த வலி.
உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மட்டுமல்ல நகங்களின் வளர்ச்சிக்கும் உதவும். உடலில் போதியளவு நீர்ச்சத்து இல்லாத பட்சத்தில் நகங்கள் வலுவில்லாமல் உடைய தொடங்கும். மேலும் நகங்களின் வளர்ச்சியிலும் இது தாக்கம் செலுத்தும்.
உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைக்க முடியாத சூழலில் நகங்களுக்கு ஈரப்பதமூட்டும் க்ரீம்களை உபயோகிக்கலாம். நகங்கள் எளிதில் உடையக்கூடிய வகையில் பலவீனமாக இருந்தால் புரதம் உட்கொள்வதை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இளநீர், பழ ஜூஸ்கள் உள்ளிட்ட திரவ உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். காலை உணவில் முட்டை மற்றும் பால் பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.மேலும் நகத்தின் வளர்ச்சிக்கு வைட்டமின்-ஈ அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
நகங்களை வட்ட வடிவில் வளர்ப்பதே சிறப்பானது. மற்ற வடிவங்களுடன் ஒப்பிடுகையில் வட்ட வடிவ நகங்கள்தான் எளிதில் உடைந்து போகாது.
மேலும் நகங்களை நீளமாக வளர்ப்பதற்கும் உதவியாக இருக்கும். ஒருவேளை உடையக்கூடிய நகங்களாக இருந்தால் அவற்றை அடிக்கடி வெட்டி ஒழுங்குபடுத்தி வரலாம்.
அப்படி வெட்டி ஒழுங்கமைப்பது நகங்கள் வலுவாக வளர்வதற்கு உதவியாக இருக்கும். நகத்திற்கு நிறப்பூச்சுகளை பயன்னடுத்தும் போது தரமானதை தேர்வு செய்தல் அவசியம். இது நகங்களின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.