சிக்கனில் இப்படி சூப் செஞ்சிருக்கீங்களா..? குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க..!
நமக்கு வழக்கமாக ஏற்படும் குட்டி பசியை போக்க நம்மில் பலர் சூப் குடிப்போம். இது மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. அதுமட்டும் அல்ல, இதில் அதிக கலோரி உள்ளது.
அப்படி அசைவ பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கன் கிளியர் சூப் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது மிகவும் சுவையானது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் ஸ்டாக் செய்ய…
சிக்கன் – 250 கிராம்.
வெங்காயம் – 1.
பூண்டு – சிறிது.
கேரட் – 1.
செலெரி ஸ்டிக் – தேவையான அளவு.
தண்ணீர் – 2 லிட்டர்.
மிளகு
கல் உப்பு – 1 ஸ்பூன்.
பிரியாணி இலை – 2.
சிக்கன் கிளியர் சூப் செய்ய…
எலும்பில்லாத சிக்கன் – 100 கிராம்.
சிக்கன் ஸ்டாக்
ப்ராக்லி
காளான்
சைனீஸ் முட்டைகோஸ்
பூண்டு – 1 ஸ்பூன் நறுக்கியது.
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்.
சோயா சாஸ் – 1 ஸ்பூன்.
செய்முறை:
முதலில், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், கேரட், செலெரி ஸ்டிக், நசுக்கிய பூண்டு சேர்க்கவும்.
பின்பு சிக்கன், மிளகு, கல் உப்பு, பிரியாணி இலை சேர்க்கவும்.
பிறகு பாத்திரத்தை மூடி மிதமான தீயில் 1 மணிநேரம் வேகவிடவும்.
பின்பு சிக்கன் வேகவைத்த தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் சிக்கன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து அதில் எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.
பின்பு நறுக்கிய ப்ராக்லி, காளான், பூண்டு, மிளகு தூள், சைனீஸ் முட்டைகோஸ், சோயா சாஸ் சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு எடுத்தால், சிக்கன் கிளியர் சூப் தயார்.