மாலை நேர ஸ்நாக்ஸ் தகி வடை
தயிர் வடை அல்லது வட இந்திய ஸ்டைல் தகி வடை மிகவும் புகழ் பெற்ற வாய்க்கு ருசியான ரெசிபி. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்து – 1 கப்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1/2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1/2 டேபிள் ஸ்பூன்
வறுத்த சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1 கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு
தண்ணீர் – 1 டம்ளர்
கெட்டித் தயிர் – 400 கிராம்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 1/2 டேபிள்
ஸ்பூன் சாட் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டேபிள் ஸ்பூன்
மாங்காய் சட்னி – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி சட்னி – 1 டேபிள் ஸ்பூன்
மாதுளை பழ விதைகள் – அலங்கரிக்க
செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வறுத்த சீரகத்தை நன்றாக பொடித்து கொள்ளவும்.
உளுந்தம் பருப்பை 4 மணிநேரம் ஊற வைத்து அதன் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும். அதனுடன் உப்பு, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் போன்றவற்றையும் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
இந்த மாவுக் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வறுத்து பொடித்த சீரகம், சிறிதளவு கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு வடைகளாக தட்டி சூடான எண்ணெய் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
வடை ரெடியானதும் அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். வடை மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும். வடை நன்றாக மென்மையாக ஊறியவுடன் அதில் உள்ள தண்ணீரை பிழிந்து விட்டு தனியாக வைக்கவும்.
தயிரில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை நன்றாக கலந்து கொள்ளவும்.
ஊறிய வடையை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மேல் மேல் இனிப்பு தயிரை ஊற்றவும்.
அடுத்து அதன் மேல் சிவப்பு மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு, மாங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி இவற்றை தூவவும்.
கடைசியாக மாதுளை விதைகள், கொத்தமல்லி இலைகளை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.
சூப்பரான தகி வடை ரெடி.