சமையல் குறிப்புகள்
மீல்மேக்கர் வைத்து பிரியாணி செய்யலாம் வாங்க
தேவையான பொருட்கள்
- பாஸ்மதி அரிசி – 1 கப்
- மீல்மேக்கர் – 1 கப்
- உப்பு – தேவைக்கு
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – 2
- மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
- சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
- இஞ்சி-பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
- பட்டை தூள் கிராம்புத் தூள் சோம்பு தூள் – தலா 1/4 டீஸ்பூன்
- பிரிஞ்சி இலை – சிறிது
- புதினா கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி
- நெய் + எண்ணெய் – 2 டேபிஸ்பூன்.
செய்முறை
- வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.
- கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
- குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
- அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு மீல்மேக்கர் அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
- சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி.
- வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.