குழந்தைகள் புஷ்டியாக வளர சில டிப்ஸ்
மிளகு, சீரகம், அதிமதுரம், தென்னம்பூ, ஆலம்விழுது – ஒவ்வொரு துண்டுகளாக எடுத்து பசும்பாலிட்டு மை போல அரைத்து முக்கால் படி பசு நெய்யில் கலக்கிக் காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும். காலை, மாலை ஒரு மொச்சை அளவு கொடுத்து வந்தால் குழந்தைகள், புஷ்டியாக வளர்வார்கள்.
குழந்தைகளுக்குக் கொடுக்கும் பசும்பாலைக் காய்ச்சும் போது, அதில் 5 துளசி இலைகளை நன்றாகக் கழுவி, உலர வைத்து அதில் இட்டு நன்றாகக் கொதித்ததும், இறக்கி ஆறினபிறகு துளசி இலைகளை எடுத்துவிட்டு குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், எந்த நோயும் அவர்களை அண்டாது.
வயிற்றில் புளிப்பு சேராது. ஜலதோஷம் பிடிக்காது. ஜீரண சக்தி உண்டாகும்.
9 மாதங்கள் கடந்த குழந்தைகள் துரித வளர்ச்சியும் பருமன் ஆகவும் வளர, பகல் உணவில் நெய் பருப்புச் சாதத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கை பாதி சேர்த்து பிசைந்து ஊட்டி விடவும். வாரம் 3 நாட்கள் இவ்வாறு கொடுக்கலாம்.வேக வைத்த உருளைக் கிழங்குடன் பால் ஏடு, சர்க்கரை, சேர்த்துப் பிசைந்தும் ஊட்டலாம்.
ஒரு பிடி கொத்தமல்லி இலையை ஆய்ந்து, பழுப்பு இலைகளை நீக்கித் தனியே வைக்கவும். இரண்டு ஸ்பூன் உளுந்து, இஞ்சி 1 துண்டு, சிறிது புளி, பெருங்காயம் 1 துண்டு, மிளகு 10 ஆகியவற்றை நெய்யில், வேக வைத்து, வறுத்து, வதக்கி, தேங்காய்த் துண்டு சிறிது மேற்படி கொத்துமல்லி இலையுடன் சேர்த்து மை போல் அரைக்கவும். அதன்பின்சிறிது சீரகம் சேர்த்துத் தாளித்து கலந்து துவையல் ஆகவும்.
பகல் உணவில் 3 பிடி சூடான சாதத்தில் அரைத் தேக்கரண்டி நெய், 5 தேக்கரண்டி துவையல், கலந்து பிசைந்து சாப்பிட்டு வரவும். 3 மாதத்தில் உடலுக்குத் தேவையான இரத்தத்தை இதன் மூலம் பெற்றிடலாம்.
வாரம் இரண்டு நாளாவது இவ்வாறு சாப்பிடுவது உடல் வளர்க்கும் எளிய உபாயமாகும். இரண்டு வயதைத் தாண்டும் குழந்தைகளும், மகப்பேறு அடைந்த தாய்மார்களும் இவ்வாறு உண்பது ‘இரத்த சோகை’ நோயை விரட்டும்.
ஏத்தன் (நேந்திரம்) காய்களை தோலைச் சீவி, சிறிய துண்டுகாளக்க வேண்டும். பிறகு அவைகளை நல்ல வெயிலில் காய வைத்து, நன்றாக உரலில் இடித்து, சல்லடையில் சலித்து, பொடியை காற்றுப் புகாத டின்னில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் வயதுக்கு ஏற்றவாறு அளவான பொடியை எடுத்து, அதற்குரிய தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். நன்கு தண்ணீர் கொதித்ததும், பொடியைப் போட்டுக் கூழ் போல் கிளறி இறக்கவும். அளவான சர்க்கரை சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
வளரும் குழந்தைகளுக்கு விளாம்பழம் ரொம்ப நல்லது. அப்பப்போ விளாம்பழத்தைக் கொடுத்து சாப்பிட வைத்தால், உறுதியான எலும்புகள் அமையும். ஞாபக சக்தி அபாரமா இருக்கும்.
நோய்களும் அடிக்கடி தாக்காது. புற்கள் பலப்படும். வயதானவர்களுக்கும் டானிக் மாதிரி செயல்படும்.
இரவில் தூங்கும் முன் சூடான பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் குழந்தைகளுக்கு நல்ல ‘ஞாபக சக்தி’ வரும். நல்ல தூக்கமும் வரும். மெலிந்த தேகம் சற்று பூசினாற் போன்று வரும். எனவே உங்கள் குழந்தைகள் ஆரோக்கியம் அற்ற குழந்தைகள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.