அழகு..அழகு..புதியவை

தயிரை எப்படி யூஸ் பண்ணுனா, சருமத்தில் உள்ள கருமை போகும்-ன்னு தெரிஞ்சுக்கணுமா?

பெரும்பாலான பெண்கள் முகத்தின் அழகை மேம்படுத்த கடைகளில் விற்கப்படும் விலை அதிகமான அழகு சாதன பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் அழகு நிலையங்கள், ஸ்பா சென்டர்கள் போன்ற இடங்களுக்குச் சென்று அழகைப் பராமரிப்பார்கள். ஆனால் அனைவராலுமே இம்மாதிரியான வழிகளை மேற்கொள்ள முடியாது. சில பெண்கள் இயற்கை வழியில் சரும பிரச்சனைகளை சரிசெய்ய மற்றும் அழகை மேம்படுத்த முயற்சிப்பார்கள்.

அப்படி நமது சரும ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரிக்க உதவும் எளிதில் கிடைக்கக்கூடிய ஓர் பொருள் தான் தயிர். இந்த தயிர் அனைவரது வீட்டிலுமே பொதுவாக காணப்படும் பொருளாகும். இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும். முக்கியமாக இந்த தயிருடன் ஒருசில பொருட்களைச் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும் முகம், பொலிவோடு அழகாக காணப்படும். உங்களுக்கு தயிரை எப்படி பயன்படுத்தினால் சருமத்தின் நிறம் அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் காட்சியளிக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானல் தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால், கீழே தயிரைக் கொண்டு தயாரிக்கும் சில எளிய ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி உங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

படிக்க க்ளிக் செய்யவும் தயிர் மற்றும் எலுமிச்சை

* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடல் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் முகத்தை நீரால் கழுவிக் கொண்டு, அந்த ஈரமான முகத்தில் தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு முகத்தை நீரால் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், முகம் பொலிவாக காட்சியளிக்கும். தயிர் மற்றும் வெந்தயம்

* ஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைக்க வேண்டும்.

* பின் காலையில் எழுந்ததும் அதை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த, பொலிவிழந்து காணப்படும் முகம் பொலிவோடும் அழகாகவும் காட்சியளிக்கும். தயிர் மற்றும் ஆலிவ் ஆயில்

* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு ஒரு முறை முகத்திற்கு மாஸ்க் போட்டு வர, நல்ல தீர்வு கிடைக்கும். தயிர் மற்றும் தேன்

* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவுங்கள். * இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்த முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். தயிர் மற்றும் கற்றாழை ஜெல் * ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு இரவில் படுக்கும் முன், இந்த கலவையை முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வையுங்கள். * மறுநாள் காலையில், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த செயலால் முகம் எப்போதும் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும். தயிர் மற்றும் தக்காளி

* தக்காளியை அரைத்து, அதில்1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும். தயிர் மற்றும் பப்பாளி

* 1 டீஸ்பூன் பப்பாளி கூழுடன், 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இரவில் படுக்கும் முன் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

* மறுநாள் காலையில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். * இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள, முகச் சருமம் அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். தயிர் மற்றும் பால் பவுடர்

* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 5-10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு குறைந்தது 2 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். தயிர் மற்றும் அரிசி மாவு

* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டீஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் இதனை நன்கு கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரந்தோறும் தவறாமல் பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.

Related Articles

5 Comments

  1. Yesterday, while I was at work, my sister stole my iPad and tested to see if it can survive a 30 foot drop, just so she can be a youtube sensation. My iPad is now destroyed and she has 83 views. I know this is totally off topic but I had to share it with someone!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker