புதியவைவீடு-தோட்டம்
ஷூக்களை பளிச் செய்ய சூப்பர் வழி: ட்ரை பண்ணி பாருங்க
வெள்ளை கான்வர்ஸ் ஷூக்களை இயற்கை பொருட்களை கொண்டு சுத்தம் செய்ய சில அற்புதமான வழிகள் இதோ,
- பேக்கிங் சோடா மற்றும் வினிகரை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து அதில் ஒரு பழைய பிரஷ்யை நனைத்து ஷூ முழுவதும் சில நிமிடங்கள் தேய்த்து கழுவ வேண்டும்.
- வெள்ளை டூத் பேஸ்ட்டை ஷூவின் அழுக்கு உள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து, ஷூவை தண்ணீரில் கழுவி காய விட வேண்டும்.
- பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகிய இரண்டையும் சுடுநீரில் கலந்து நன்றாக பேஸ்ட் செய்து அதை ஷூ முழுவதும் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
- எலுமிச்சை, பேக்கிங் சோடா மற்றும் டூத் பேஸ்ட்டை வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து ஷூ முழுவதும் நன்றாக தேய்த்து 2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- பேக்கிங் சோடா மற்றும் டிடர்ஜெண்ட்களை சரியான அளவில் எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து அதை ஷூ முழுவதும் தேய்த்து 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
- காட்டன் பஞ்சை அசிடோன் மற்றும் நெயில் பாலிஷ் ரிமூவரில் நனைத்து அதை ஷூவில் அழுக்கு படிந்த இடங்களில் நன்றாக தேய்த்து சோப் அல்லது பவுடர் கொண்டு கழுவ வேண்டும்.