ஆரோக்கியம்புதியவைமருத்துவம்

நம் காதுகளை பாதுகாத்து நோய் தொற்றிலிருந்து விடுபட சில ஆலோசனைகள் தெரிந்து கொள்ளுங்க

இன்று நம்மில் பெரும்பாலானோர் காதுகளில் ஹெட்போன் மாட்டிக் கொண்டே திரிகிறோம். வேலைபளுவை குறிக்கிறோம் என்பதற்காக, 24 மணிநேரமும் ஹெட்போன் வழியாக பாடல் கேட்பது நமது பொழுதுப்போக்காக மாறிவிட்டது. இதன் காரணத்தால் இன்று காது கேட்கும் திறனும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில் சுமார் 275 மில்லியன் மக்களுக்கு மிதமானது முதன் அதிகமான அளவு வரை காது கேளாமை தொடர்பான பாதிப்புகள் இருப்பதாக தெரிகிறது.

செவியில் புறச்செவி (வெளிச்செவி), இடைச்செவி(நடுச்செவி), உட்செவி என்ற மூன்று பகுதிகள் உள்ளன. வெளியில் தெரிவது புறச்செவி, இது புனல் மாதரி ஒலி அலைகளைச் சேர்த்து இடைச்செவி மற்றும் உட்செவிக்கு அனுப்புகிறது. கேட்கும் திறனால் மட்டுமே மொழித்திறன் உருவாகி குழந்தை பேச தொடங்குகிறது.

காது நோய்க்கான காரணம்

காது நோய்களில் முக்கியமானது, காதுவலி. காதில் கொப்புளம் தோன்றுவது, காதில் சீழ் வடிவது, அழுக்கு அல்லது அந்நியப் பொருட்கள் அடைத்துக் கொள்வது, எறும்பு போன்ற பூச்சி புகுவது, காதில் அடிபடுவது போன்றவற்றால் காதுவலி வரும்.

மூக்கில் சளி பிடிப்பது, மூக்கு ஒழுகுவது, தடுமம் போன்ற மூக்குப் பிரச்னைகளால்கூட காதுவலி வருகிறது.

தொண்டையில் சளி பிடித்து புண் உண்டாவது, டான்சில் வீங்குவது போன்றவையும் காதுவலியை வரவேற்கும். காதுவலிக்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணமாகும்.

காதுகளை நோண்டுவதை தவிர்க்க வேண்டும்

தினமும் காது குடைந்து அழுக்கை எடுப்பது பெரிய தவறு. காதில் நீங்கள் அழுக்கு என்று எண்ணி சுத்தம் செய்பவை தான் உண்மையில் காதுகளை பாதுகாக்கும் ஆண்டி-பாக்டீரியா ஆகும்.

எனவே, இதை முதலில் நீங்கள் சரி செய்துக் கொள்ள வேண்டும். பிறகு, காதுக்குள் தினமும் உறங்கும் போது பஞ்சை வைத்துக் கொள்வது, கண்டதை விட்டு காதுகளை நோண்டுவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. காதில் பெரும்பாலும் இறந்த சரும செல்கள் தான் அழுக்கு போன்று படிந்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை, லைசோசைம் (lysozyme) எனப்படும் ஆண்டி-பாக்டீரியல் என்சைம் ஆகும்.

உண்மையில் குளிக்கும் போது காதுகளின் மேற்புறத்தில் நீர் ஊற்றி கழுவி, மென்மையான துணியைக் கொண்டு காதின் மேற்புறத்தில் மட்டும் சுத்தம் செய்தாலே போதுமானது.

சூடான எண்ணெய்

தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சூடாக காய்ச்சி, அதை பயன்படுத்தி காதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய முடியும்.

பட்ஸ்

மென்மையான பட்ஸ்களைக் கொண்டு காதுகளை தொடர்ந்து சுத்தம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த முயற்சியின் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் – மென்மையான பட்ஸ்களை தேர்ந்தெடுப்பது தான்.

காதையோ அல்லது அதன் உட்பகுதிகளையோ சேதப்படுத்தக் கூடிய பட்ஸ்கள் அல்லது கருவிகளை பயன்படுத்த வேண்டாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker