ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

காரசாரமான சுண்டக்காய் வத்தல் குழம்பு… இப்படி ஒரு முறை செய்து பாருங்க

பொதுவாகவே வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சுண்டக்காயை வைத்து வீடே மணமணக்கும் வகையில் சுண்டங்காய் வத்தல் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சுண்டக்காய் – 1 கப்

வெந்தயம் – 2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி

துவரம் பருப்பு – 2 தே.கரண்டி

மல்லி – 2 தே.கரண்டி

மிளகு – 1 தே.கரண்டி

பெருங்காயத் தூள் – 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி

காய்ந்த மிளகாய் – 4

புளி– 75 கிராம்

சின்ன வெங்காயம் – 10

வெல்லம்– 1 தே.கரண்டி

அரிசி – 1 தே.கரண்டி

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான

அளவு கடுகு – 1 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி

கடலைப் பருப்பு – 2 தே.கரண்டி

காரசாரமான சுண்டக்காய் வத்தல் குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Sundakkai Vatha Kuzhambu Recipe

 

செய்முறை

முதலில் வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

அதே கடாய்யில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

காரசாரமான சுண்டக்காய் வத்தல் குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Sundakkai Vatha Kuzhambu Recipe

மற்றொரு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகம் வரையில் நன்றாக வதக்க வேண்டும்.

பின் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

காரசாரமான சுண்டக்காய் வத்தல் குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Sundakkai Vatha Kuzhambu Recipe

பின்னர் அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும்.

5 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிட்டு இறக்கினால் மணமணக்கும் வத்தக்குழம்பு தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker