பிஞ்சு வாழைக்காய் இருந்தால் இனி வீசாதீங்க.. அதற்கான ரெசிபி இதோ!
பொதுவாக வீடுகளில் பிஞ்சு வாழைக்காய் இருந்தால் அதனை தூக்கி வீசிவிடுவார்கள்.
இப்படி குப்பைக்கு போகும் வாழைக்காயில் புரோபயோடிக் இருக்கிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
வாழைக்காய் கொஞ்சம் காலம் வைத்திருந்தால் பழுகாத நிலைக்கு வரும்.
இந்த நிலையில் இருக்கும் வாழைக்காய்கள் நார்ச்சத்தை அதிகமாக கொண்டிருக்கும். அத்துடன் சர்க்கரையின் அளவுகள் குறைக்கும் ஆற்றலையும் கொண்டிருக்கும்.
அந்த வகையில், குப்பைக்கு செல்லும் வாழைக்காய்களை வைத்து மணமணக்கும் வகையில் நாகர்கோயில் ஸ்டைல் கல்யாண வாழைக்காய் துவட்டல் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
- வாழைக்காய் – 5
- எண்ணெய் – 1 தேக்கரண்டி
- வெங்காயம் – 1
- மிளகாய் – 3
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
- புளி தண்ணீர் – தேவையான அளவு
- பெருங்காயத்தூள் -1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – கொஞ்சம்
- மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் வாழைக்காய்களை தோல் நீக்கி சிறு துண்டாக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், மஞ்சள், உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
பின்னர் வெட்டி தனியாக வைத்திருக்கும் வாழைக்காய்களை புளிக் கொதியலில் போட்டு 5 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
இதனை தொடர்ந்து வேறொரு கடாயை எடுத்து அதில் தாளிப்பு தேவையான பொருட்களை போட்டு பொன்னிறமானதும் அதில் வாழைக்காய்களை கொட்டி உப்பு சேர்த்து கிளறி, மூடிப் போட்டு வேக விடவும்.
வாழைக்காய் வெந்தவுடன் மிளகுப்பொடி கொஞ்சமாக தூவி இறக்கினால் சூப்பரான நாகர்கோயில் ஸ்டைல் கல்யாண வாழைக்காய் துவட்டல் தயார்!