மனிதராக பிறந்த அனைவருக்குமே சில குறைகள் இருக்கத்தான் செய்யும், யாருமே அனைத்திலும் சரியானவர்களாக இருக்க முடியாது. மிஸ்டர் பர்பெக்ட்டை கண்டறிவது என்பது முடிவில்லாத பயணமாகும். ஆனாலும் சகித்துக் கொள்ளக்கூடிய அல்லது பிறரை பாதிக்காத குறைகளைக் கொண்டவர்களிடம் கண்ணை மூடிக்கொண்டு நம் வாழ்வை ஒப்படைக்கலாம்.
கண்ட்ரோல் செய்பவர்கள்
இதை சாப்பிடு, இதை உடுத்து, இப்படி நடக்க, எங்கே இருக்கிறாய் என்று எப்போதும் உங்கள் முடிவை அவர்கள் எடுப்பது ஆரம்பத்தில் அக்கறையாகத் தோன்றினாலும், அவை தொடர்ந்து அனைத்து தருணங்களிலும் நடக்கும்போது உங்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். அவர்கள் அனைத்து விஷயங்களிலும் உங்களை அடக்கி ஆள நினைப்பார்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இரண்டாம் பட்சமாக நடத்துவது
கொடுக்கல், வாங்கல், பகிர்தல் எல்லா உறவுகளுக்கும் அடிப்படையானது மேலும் அது சமமாக இருக்க வேண்டும். ஒரு ஆணுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றால் அவர் உங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டும். அனைத்து தருணத்திலும் உங்களுக்கு துணையாக இருப்பவரே உங்களுக்கு பொருத்தமானவராக இருக்க முடியம். பெற்றோருக்குப் பிறகு முன்னுரிமை பட்டியலில் நீங்கள் முதலிடத்தில் இருக்க வேண்டும்.
அடிக்கடி மன்னிப்பு கேட்பது
மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து மன்னிப்பு கேட்பது தவறான பழக்கமாகும். மன்னிப்பு என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல, அந்த தவறை மீண்டும் செய்யாதபடி உணர்ந்து செயல்பட வேண்டிய ஒரு உணர்ச்சியாகும். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் அதைச் செய்துகொண்டே இருந்தால், அத்தகைய ஆன்மாவுடன் எதிர்காலத்தை பகிர்வதுக் குறித்து நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் இருப்பது
அனைவருக்கும் சிறிதளவு ஈகோ இருப்பது நல்லது, அது அவசியமானதும் கூட. ஆனால் உங்கள் ஒருபோதும் அவர் மதிக்கவில்லை என்றால் உங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். உங்கள் கருத்து அவருக்கு எப்போதும் முக்கியமானதாக இருக்க வேண்டும். அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை, ஆனால் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து குறைந்தபட்சம் அதுகுறித்து விவாதமாவது செய்ய வேண்டும். உங்களின் சுயமரியாதையை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது.
ஒட்டிக்கொள்பவர்கள்
உங்களுக்கென தனிப்பட்ட நேரம் மற்றும் சுதந்திரம் தேவை. 24 மணி நேரமும் நீங்கள் அவர்களுடன் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருக்க வேண்டும், குழந்தை போல அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் ஒருபோதும் உங்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்க முடியாது. இவர்களால் நீங்கள் பல உறவுகளையும், தருணங்களையும் இழக்க நேரிடும்.