உலக நடப்புகள்

நேர்காணலில், உடல்மொழியும் அவசியம்

படிப்போடு, கொஞ்சம் உடல்மொழி அறிவையும் வளர்த்து கொள்வது நல்லது. அப்போதுதான், நேர்காணலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க முடியும். உடல்மொழி சார்ந்த தகவல்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறோம்.

நேர்காணலில், கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்வதை கடந்து, உடல்மொழியையும் கவனிப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனால் படிப்போடு, கொஞ்சம் உடல்மொழி அறிவையும் வளர்த்து கொள்வது நல்லது. அப்போதுதான், நேர்காணலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க முடியும். உடல்மொழி சார்ந்த தகவல்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறோம்.

* கைகுலுக்கல் நேர்காணலில் கை குலுக்கும்போது கைகள் வளையாமல் இருப்பது நேர்மையை பளிச்சென அடையாளப்படுத்தும். அலுவலகத்தில் நுழைந்தவுடனே உங்களுக்கான உடல்மொழி தேர்வும் தொடங்கி விடும் என்பதால், உங்களுக்கு ஆபீசில் வழிகாட்டி உதவுபவர் முதற்கொண்டு, நேர்காணல் செய்பவர்களுக்கும் சரியான மரியாதை தந்து பேசுவது உங்கள் ஆளுமையை ஜொலிக்க வைக்கும்.

* கவனியுங்கள்

இன்டர்வியூ அறையில் அவர்கள் அமரச்சொல்லும் முன்பே முந்திக்கொண்டு உட்காருவது, கால்மேல்கால் போட்டு உட்காருவது போன்ற செயல்கள் உங்களை வேலையில் ஆர்வமில்லாதவர் என்றே முத்திரை குத்தும். இருக்கையின் பரப்பில் முழுமையாக அமருங்கள். ஆர்வத்தை காண்பிக்கிறேன் என அதிகம் முன்னே செல்வது ஆவேச, அவசரக்காரர் என்ற பெயரையே வாங்கிக்கொடுக்கும். கால்களை குறுக்காக வைத்து அமர்வது நம்பிக்கை இல்லாததை காட்டிக் கொடுப்பதாக அமையும்.

* தலைசாய்ப்பது ஆபத்து

இன்டர்வியூவில் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும்போது தலையை கீழே கவிழ்ப்பது, எதிர்மறையான கருத்தையே நேர்காணல் செய்பவர்களுக்கு ஏற்படுத்தும். தலையை சமநிலையாக வைத்து கண்களை நேராகப் பார்த்து பேசுவது சிறப்பு.

* நேர்கொண்ட பார்வை

நேர்காணல் செய்பவர்கள் யாராக இருப்பினும் சரி, வெட்கப்படாமல் அவர்களது கண்களைப் பார்த்து பேசுவது முக்கியம். கண்களைப் பார்த்துப் பேசுவது அவர் களுக்கு சரியான மதிப்பை கொடுக்கிறோம் என்று அர்த்தம். கீழே குனிந்து பதில் சொன்னால், அந்த ஆபீசில் என்றுமே நீங்கள் தலை நிமிர்ந்து வேலை செய்ய முடியாது.

* கைகளை கவனியுங்கள்

இன்டர்வியூவில் கைகளை இறுக்கிப்பிடிப்பது, தாடை, வாயை கைகளால் தாங்கிப்பிடிப்பது போன்ற சைகைகள் வேலையில் ஆர்வமில்லாததையும், எதிர்ப்பு, பாதுகாப்பு தேடும் மனநிலை என்பதையே எதிரிலுள்ளவர்களுக்கு உணர்த்தும். பிரார்த்திக்கும்படி கைகளை வைத்திருப்பது நம்பிக்கையின் அடையாளம். அதேபோல கைகளை தளர்வாக தொடைகள் மீது வைத்திருப்பதும் சிறப்பானதே.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker