ஆரோக்கியம்

ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள் :

  • சிக்கன் – அரை
  • வெங்காயம் – 1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் –
  • உப்பு – தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • தனியா தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • மிளகு – 3 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

  • சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் , இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலந்து, ஃபிரிட்ஜில் 30 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய் , கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
  • அடுத்ததாக பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து பிரட்டுங்கள்.
  • அடுத்ததாக தனியா பொடி, இடித்த மிளகுப் பொடி சேர்த்து சிறு தீயில் கிளறி விடவும்.
  • இறுதியாக 1/4 கப் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள்.
  • பின் தண்ணீர் வற்றி சிக்கன் மென்மையாக வேகும் வரை கொதிக்க வையுங்கள்.
  • தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கிவிடுங்கள்.
  • பரிமாறும்போது ஒரு ஸ்பூன் எலுமிச்சை தூவி பிரட்டிவிட்டுப் பரிமாறுங்கள்.
  • சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker