சமையல் குறிப்புகள்புதியவை
சூப்பரான காளான் பன்னீர் மசாலா
தேவையான பொருட்கள்
- காளான் – 100 கிராம்
- பன்னீர் – 100 கிராம்
- வெங்காயம் – 2
- தக்காளி – 2
- இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4
- மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
- சீரகத்தூள் – 1 ஸ்பூன்
- கரம்மசாலாத்தூள் – 1 /2 ஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
- கட்டித்தயிர் – 1 கப்
- முந்திரிப்பருப்பு – 15
- எண்ணெய்-தேவையான அளவு
அரைக்க
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
- நறுக்கிய தக்காளி – 1 1/2 கப்
- முந்திரிப் பருப்பு – 10
செய்முறை
- கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும்.
- காளான்களை நன்கு கழுவி நறுக்கவும்.
- பன்னீரை துண்டுகளாக்கவும்.
- ஒரு பெரிய கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது இவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
- பின்பு தக்காளியையும், காளான்களையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறிவிடவும்.
- தக்காளி குழைய வதங்கியதும இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
- இதனுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு, சேர்த்து கலக்கவும்.
- அடுத்து அதில் கட்டித் தயிரை கடைந்து அதில் ஊற்றி, எண்ணெய் தனியே பிரிந்து வரும்வரை வதக்கவும்.
- கடைசியாக பன்னீர் கட்டிகளை மெதுவாக அதில் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
- காளான் பன்னீர் மசாலா மனக்க மனக்க சுவைக்க ரெடி…