சமையல் குறிப்புகள்

உடலுக்கு வலுசேர்க்கும் கம்பு ரவை உப்புமா

தேவையான பொருட்கள் :

  • கம்பு ரவை – 1 கப்
  • பெரிய வெங்காயம் – 1
  • வரமிளகாய் – 2
  • இஞ்சி – சிறிது
  • கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – சிறிது
  • கறிவேப்பிலை – சிறிது
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • கேரட் – 1
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு




செய்முறை :

  • வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கம்பு ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.
  • கேரட்டை துருவிக்கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் அதில் பொருங்காயத்தூளை தூவி வரமிளகாயை கிள்ளிப் போட்டு இஞ்சியை தட்டிப் போட்டு ஒரு முறை கிளற வேண்டும்.
  • அடுத்து அதில் வெங்காயம், கேரட் துருவல் போட்டு நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் கேரட் துருவல் நன்றாக வதங்கியதும் பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • தண்ணீர் கொதித்ததும் அதில் கம்பு ரவையை சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைக்கவும்.
  • பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல் தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கிவிட வேண்டும்.
  • இப்போது சுவையான கம்பு ரவை உப்புமா ரெடி!!!
  • இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker