வீட்டில் முதலுதவி பெட்டி இருப்பது அவசியமானது. அது சின்னச்சின்ன காயங்களுக்கு மருந்தாகி நமது பதற்றத்தை குறைக்க உதவும். வீட்டின் சமையல் அறையில் இடம்பெற்றிருக்கும் பொருட்களையே முதலுதவிக்கு பயன்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.
மஞ்சள், சமையல் மட்டுமின்றி மருத்துவத்திலும் பயன்பாட்டில் இருக்கிறது. கிருமி நாசினியாகவும், நோய் எதிர்ப்பு ஊக்கியாகவும் செயல்படுகிறது. அது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக் கிறது. மஞ்சளில் உள்ளடங்கி இருக்கும் மூலப்பொருட்கள் விரைவாக காயங் களை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கின்றன. சிறிய வெட்டு காயங்களுக்கு மஞ்சளை பயன் படுத்தலாம். இரத்த கசிவை நிறுத்தவும், நோய் தொற்றுவை தடுக்கவும் மஞ்சள் தூளை உபயோகிக்கலாம். வெட்டு காயங்கள் மீது மஞ்சள் தூளை நேரடியாகவே தடவலாம். மஞ்சள் தூளை தண்ணீர் அல்லது கடுகு எண்ணெய்யில் கலந்தும் தடவலாம்.
நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், வாயு தொந்தரவு போன்ற பாதிப்புகளுக்கு பேக்கிங் சோடா நிவாரணமளிக்கும். உடனடி நிவாரணம் அளித்து உடலில் அமிலத்தன்மையை சீராக்கும் ஆற்றல் பேக்கிங் சோடாவுக்கு உண்டு. சிறிதளவு பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடித்தால் போது மானது.
சரும எரிச்சல் பிரச்சினைக்கு ஆப்பிள் வினிகரை உபயோகிக்கலாம். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் வினிகரை தண்ணீரில் கலந்து கை, கால்களை கழுவலாம். அது சரும எரிச்சலுக்கு நிவாரணம் தரும்.
பூச்சி கடித்தலுக்கு பூண்டுவை பயன்படுத்தலாம். அது ஆன்டி பயாடிக் பண்புகளை கொண்டுள்ளது. நமைச்சல், அரிப்பை போக்கி விரைவாக நிவாரணம் அளிக்கும். பூண்டு சாறு எடுத்து பூச்சி கடித்த இடத்தில் பூசினால் நிவாரணம் கிடைக்கும்.