சமையல் குறிப்புகள்
சூப்பரான அப்பளம் வத்த குழம்பு
தேவையான பொருட்கள்
- புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
- மிளகாய் தூள் – 4 டீஸ்பூன்
- பெருங்காயம் – தேவையான அளவு
- மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- உப்பு – சுவைக்கேற்ப
- நல்லெண்ணெய் – 1/4 கப்
- அப்பளம் – 4
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
- துவரம்பருப்பு – 2 டிஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 6
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
- புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சேர்த்து தாளித்த பின்னர் ஒடித்து வைத்துள்ள அப்பளத்தை இதனுடன் சேர்த்து குறைந்தது 1 நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
- பின் அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேருங்கள்.
- அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்குங்கள்.
- அப்பளம் வத்த குழம்பு தயார்.