சமையல் குறிப்புகள்
பச்சைப் பட்டாணி போண்டா
தேவையான பொருட்கள் :
- வேகவைத்த பச்சைப் பட்டாணி – 200 கிராம்
- கேரட் துருவல் – ஒரு டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- புதினா சிறிதளவு – சிறிதளவு
- எண்ணெய் – 300 கிராம்
- உப்பு – தேவையான அளவு.
மேல் மாவுக்கு:
- கடலை மாவு – 150 கிராம்
- அரிசி மாவு – 25 கிராம்
- மிளகாய்த்தூள், உப்பு – சிறிதளவு.
செய்முறை:
- ப.மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேகவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்.
- பின்னர் அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.
- இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
- மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் வைத்து சூடானவுடன் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- சூப்பரான பச்சை பட்டாணி போண்டா ரெடி.
- குறிப்பு: பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.