சமையல் குறிப்புகள்
காடை பெப்பர் கிரேவி
தேவையான பொருட்கள்
- காடை – 6
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 3
- தக்காளி – 3
- மிளகாய் – 2
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்ட
- கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
- மிளகு – 1/2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன்
- சோம்பு – 1/4 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் – 2
- பட்டை – 2 இன்ச்
- தேங்காய் எண்ணெய் – தேவைக்கு
செய்முறை
- காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- மிளகு, சீரகம், சோம்பு, ஏலக்காய், பட்டை இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொஞ்சம் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை இவை அனைத்தும் சேர்த்து தாளிக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் ப.மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக குழைய வேகவிடவும்.
- பின்பு காடை, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
- அடுத்து அதில் தயிர் சேர்த்து குறைந்த தணலில் வேக விடவும்.
- காடை அரை வேக்காடு வெந்ததும் திரித்த தூள்களை சேர்த்து வேக விடவும்.
- எண்ணெய் பிரிந்து வரும்வரை குரைந்த தணலில் வைத்தே வேகவிடவும்
- பின்பு எலுமிச்சை சாறு ஊற்றி கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.
- நெய் சோறு, சப்பாத்தி, ரசம் சோறு ஆகியவற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
- சூப்பரான காடை பெப்பர் கிரேவி ரெடி.