எடிட்டர் சாய்ஸ்

குழந்தைகளும், கண்ணாடிகளும்…

கண்ணாடி அணிந்திருக்கும் குழந்தைகளை பெற்றோர் பார்க்கும் போது, இந்த கண்ணாடியுடன் நீ மிகவும் அழகாய் தோன்றுகிறாய் என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்துவோம்.

குழந்தை பருவத்தில் கண்ணாடி அணிந்திருக்கும் பிள்ளைகள் அல்லது அவர்கள் பெற்றோர் பெரும்பாலும் எதிர்கொள்ளும் கேள்விதான் இது. உங்கள் குழந்தைக்கு கண்ணாடி அவசியம் என்று கூறும் போது பெற்றோர் பலர் மருத்துவரிடம் கேட்கும் கேள்வியும் இதுதான்.

சமுதாயத்தில் நூற்றில் எட்டு சதவீத பிள்ளைகளுக்கு கண்ணாடி அவசியமாகிறது. பள்ளிக்கூடங்களில் மேற்கொள்ளப்படும். ஆய்வுகளின் படி பார்த்தால் 10% பிள்ளைகளுக்கு கண்ணாடிகள் தேவைப்படுகிறது. நம்முடைய கண்கள் கேமராக்களை போன்றவை வெளியிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கருவிழியினாலும், லென்சினாலும் குவிக்கப்பட்டு விழித்திரையின் பார்வைப்புள்ளியில் விழுகின்றன.சரியாக விழித்திரையின் மேல் குவியும் போது அந்த ஒளி அற்றல் மின் ஆற்றலாக மாற்றப்பட்டு பார்வை நரம்பின் மூலம், மூளையை சென்றடைந்து தெளிவான பார்வை சாத்தியமாகிறது. கண்களின் நீளம் அதிக மாகவோ, குறைவாகவோ இருப்ப தனாலும், கருவிழி அல்லது லென்ஸின் வளைவு மாறுபாடாக இருப்பதினாலும், கண் களில் பார்வைப்புள்ளியின் மேல் ஒளிக்கதிர்களை குவிக்க இயலாமல் போகிறது. அதனால் மங்கலான பார்வை நேரிடுகிறது. இதை ஒளிவிலகள் பிழை என்று அழைக்கின்றோம். (Refractive Cross)

ஒளிக்கதிர்கள் பார்வைப் புள்ளியை அடைவதற்கு முன்பாகவே குவிந்து விட்டால் அதை கிட்ட பார்வை என்று கூறுகிறோம். தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகவும், கிட்டத்தில் உள்ள பொருட்கள் தெளிவாகவும் தெரியும். ஒளிக்கதிர்கள் விழித்திரையைத் தாண்டி குவியும்போது அதை தூரப்பபர்வை என்று கூறுகிறோம். பின்புறம் சென்று குவியும் ஒளிக்கதிர்களை, கண்களில் உள்ளே உள்ள தசைகள், சுருங்கி லென்ஸின் முன் வளைவினை மாற்றி விழித்திரையில் குவிக்க முயற்சி செய்கிறது.

ஆதனால் தூரப்பார்வை சுற்று தெளிவாக தெரிந்தாலும், தொடர்ந்து படிக்கும் போதோ எழுதும் போதோ இந்த தசைகள் சேர்ந்து விடுவதன் காரணமாக மங்களான பார்வை, தலைவலி, கண் சோர்வு போன்றவை ஏற்படுகிறது. கிட்டப்பார்வை உள்ளவர்கள், குழிலென்ஸ்களை கண்ணாடிகளில் அணிவதன் மூலமாகவும், தூரப்பார்வை உள்ளவர்கள் குவிலென்ஸ்களை கண்ணாடிகளில் அணிவதன் மூலமும், சமச்சீரற்ற பார்வை உள்ளவர்கள் சிலிண்ட்ரிகள் லென்ஸ் அணிவதன் மூலமாகவும் கண்பார்வையை சீராக பெற முடியும்.குழந்தைகளுக்கு, விசேஷமாக இந்த குறைபாடுகளை கண்டறிந்து அதை சரி செய்வது முக்கியம். கண்ணாடிகள் அவை தேவைப்படுவோருக்கு இன்றிமையாதவை இனியாவது கண்ணாடி அணிந்திருக்கும் குழந்தைகளையோ அவர்கள் பெற்றோரையோ பார்க்கும் போது, “ச்.ச்.சு.அ. இந்த வயசுலயே கண்ணாடியே” என்று கேட்டு அவர்களை மனவடிவாக்காமல் இந்த கண்ணாடி உனக்கு அருமையாக பொருந்துகிறது. இந்த கண்ணாடியுடன் நீ மிகவும் அழகாய் தோன்றுகிறாய் என்று குழந்தைகளிடம் கூறி அவர்களை உற்சாகப்படுத்துவோம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker