சமையல் குறிப்புகள்

ஆரோக்கியமான கோதுமை ரவா தோசை

சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கோதுமை ரவை ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • அரிசி மாவு – கால் கப்,
  • கோதுமை ரவை – முக்கால் கப்,
  • புளித்த மோர் – ஒரு கரண்டி,
  • சீரகம் – ஒரு டீஸ்பூன்,
  • வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று,
  • இஞ்சி – சிறு துண்டு,
  • கொத்தமல்லி – ஒரு டேபிள்ஸ்பூன்,
  • கறிவேப்பிலை – தேவையான அளவு,
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு.




செய்முறை:

  • வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கோதுமை ரவை, உப்பு, சீரகம், மோர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் விட்டு, தோசை மாவை விட நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் நான்ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து சூடானதும். சிறிது எண்ணெயை தடவி, மாவை விளிம்பிலிருந்து வட்டமாக உள்புறம் ஊற்றவும்.
  • ஒரு டீஸ்பூன் எண்ணெயை சுற்றிலும் விட்டு, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு, முறுகலாக எடுத்துப் பரிமாறவும்.
  • சூப்பரான சத்தான கோதுமை ரவா தோசை

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker