சமையல் குறிப்புகள்
மலச்சிக்கல் வராமல் தடுக்கும் பப்பாளி இஞ்சி சூப்
பப்பாளியில் உள்ள நார்சத்து மனித உடலில் செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் வராமல் இருக்க உதவும். பப்பாளி இஞ்சி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- பப்பாளி பழம் – சிறியது (பாதி),
- இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
- வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்),
- காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப்,
- மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப,
- கொத்தமல்லி தழை – சிறிதளவு,
- கிரீம் – சிறிதளவு.
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
- பப்பாளி பழம், இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து அதனுடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி… சூப் கப்பில் ஊற்றவும்.
- அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.
- சூப்பரான பப்பாளி இஞ்சி சூப் ரெடி.