உறவுகள்புதியவை

உங்க மனைவிக்காக இந்த விஷயங்களை செஞ்சிருக்கீங்களா?

உங்க மனைவிக்காக இந்த விஷயங்களை செஞ்சிருக்கீங்களா?

கணவன் எதிர்பார்க்காமலேயே அவனுக்கான வேலைகளை இன்றுவரை மனைவி செய்துக் கொண்டே தான் இருக்கிறாள். ஆனால், மனைவி எதிர்பாராத தருணத்தில், மனைவிக்கு தேவையான வேலைகள் என்னென்ன நீங்கள் ஒரு கணவனாக செய்துள்ளீர்கள்? அட்லீஸ்ட் இந்த லிஸ்ட்ல இருக்க இந்த விஷயமாவது கட்டின மனைவிக்காக செஞ்சிருக்கீங்களா?மனைவி சோர்வாக, களைப்பாக உணரும் போது, அவரருகே அமர்ந்து, கால் பிடித்துவிடுவது, கால் விரல் சொடக்கு எடுத்துவிடுதல் போன்றவை செய்துள்ளீர்களா? இன்னும் சில ஆண்கள் மனைவியின் கால்களை பிடிக்க கௌரவம் பார்ப்பார்கள். ஆனால், இது மனைவிக்கு கணவன் மீது,” கௌரவம் பாராமல் தன் மீது அன்பு செலுத்துகிறார்” என்ற உணர்வு அதிகரிக்க, காதல் அதிகரிக்க செய்யும் கருவியாக அமையும்.
சமையல் செய்யும் போது பின்னாடி இருந்து கட்டிபிடிப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துவது. காதல் விளையாட்டுகளுடன் அவருடன் சேர்ந்து சமைக்க உதவுவது.

சண்டையிட்டு அழவைத்த பிறகு, முதல் ஆளாக சென்று மன்னிப்பு கேட்டு, அரவணைத்து ஒரு ஆசை முத்தம் கொடுத்தது உண்டா? இல்லையேல் அடுத்த முறை சண்டையிடும் போது கொடுத்து பாருங்கள். சண்டை மட்டுமல்ல, உங்கள் மீதுள்ள கோபமும் ஒரு நொடியில் அடங்கிவிடும்.இப்போதெல்லாம், மாடர்ன் கணவன்மார்கள் மாதவிடாய் காலத்தில் மனைவியை ஒதுக்குவது இல்லை. ஆண்களுக்கும் மாதவிடாய் பற்றிய தெளிவு அதிகரித்து வருகிறது. ஆனால், இன்றும் மாதவிடாய் நாட்களில் மனைவியை தொட கூட தயக்கம் காட்டும் ஆண்களும் இருந்து வருகிறார்கள். இது உடலளவில் பாதிக்கப்படும் அவர்களுள் மனதளவிலும் பாதிப்பை அதிகரிக்கும். முடிந்த வரை மாதவிடாய் நாட்களில் மனைவியை அனுசரித்து பழகுங்கள்.மனைவி வேலை விஷயமாக அல்லது வெளியூர் சென்று நள்ளிரவில் ஊர் திரும்பும் போது, நேரம் பாராமல் அவருக்காக ஏர்போர்ட், ரெயில்நிலையம் அல்லது பேருந்து நிலையத்தில் தாமதம் ஆவதை பொருட்படுத்தாமல், அவருக்காக காத்திருந்தது உண்டா? இது போன்ற செயல்களை நீங்கள் மனம், முகம் சுளிக்காமல் செய்தால், அதை பற்றி தம்பட்டம் அடித்து பெருமையாக பேசுவது மனைவிக்கு பிடித்தமான செயலாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker