ஆரோக்கியம்புதியவை
கழுத்து, முதுகு, இடுப்பு வலியை குணமாக்கும் மகராசனம்
பெயர் விளக்கம்: ‘மகர’ என்றால் முதலை என்று பொருள். இந்த ஆசனம் முதலை தலை தூக்கிய நிலை போல இருப்பதால் ‘மகராசனம்’ என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: தரை விரிப்பின் மேல் குப்புறப்படுக்கவும், இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைக்கவும், கைகளை தலைக்கு முன்னால் நீட்டி காதுகளுக்கு அருகில் இருக்கும்படி வைக்கவும், உள்ளங்கைகள் தரைவிரிப்பின் மேல் படிந்திருக்கட்டும். நெற்றியை தரை விரிப்பின் மேல் வைக்கவும், உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். கண்கள் மூடி இருக்கட்டும், சில வினாடிகள் கழித்து கண்களை திறந்து முழங்கைகளை மடக்கி இரண்டு உள்ளங்கைகளையும் கன்னத்தின் இரு பக்கங்களிலும் வைக்கவும். கண்களை மூடவும் இந்நிலையில் 2 முதல் 5 நிமிடம் நிலைத்திருக்கவும், இந்த ஆசனத்தை 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம்.
பயிற்சிக்குறிப்பு: இரண்டு நிமிடம் கூட இந்த ஆசன நிலையில் நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு நேரம் செய்யலாம்.கவனம் செலுத்த வேண்டிய இடம்: கழுத்து, முதுகு, இடுப்பு பகுதியின் மீதும் மூலாதார சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயன்கள்: கழுத்து மற்றும் முதுகில் வளையும் தன்மை அதிகரிக்கும் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலிக்கு பயனுள்ள ஆசனம் இது.