புதியவைவீடு-தோட்டம்

இத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா?… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு?

சோப்பு பயன்படுத்திக் குளிப்பதைவிட, இப்போது பெரும்பாலான மக்கள் லிக்யுட் சோப் தான் பயன்படுத்துகிறார்கள். அதற்காக பார் சோப்பை மறந்து விடக்கூடாது. குளிப்பதற்கு நீங்கள் பயன்படுத்தினாலும் படுத்தாவிட்டாலும் அந்த சோப்பை குளிப்பதற்கு மட்டுமல்லாது இன்னும் நிறைய விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். அதை கொண்டு ஆச்சரியம் தரும் வகையில் நம் வீட்டின் பல தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.ஏன்! நீங்களே சொந்தமாக லிக்யுட் சோப் தயாரிக்கலாம்.

ட்ராயர், கதவுகளை சரி செய்ய

நமது மர ட்ராயர் மக்கர் பண்ணினாலோ அல்லது கதவுகள் சரியாக திறக்கவில்லை என்றாலோ கவலைப்பட வேண்டாம். ஒரு சோப் அதை சரி செய்துவிடும். ட்ராயரின் முனைகளில் அல்லது கதவுகளின் இடுக்கில் சோப் கொண்டு தேய்த்தால் இந்த பிரச்சினை சரியாகும்.


துணி அலமாரி

துணி அலமாரிகள், பெட்டிகள், கார், துணி டிராயர்களை புத்துணர்ச்சியாக இருக்க வைக்க எப்படி பயன்படுத்தலாம்?… சோப்களை நாம் மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு முன், நிறைய சோப்புகளை வாங்கி துணி அலமாரிகள், டிராயர்கள், பெட்டிகள் மற்றும் கார்களில் சேமித்து வைக்க வேண்டும். இது புதுவித நறுமணத்தை ஏற்படுத்தி புத்துணர்ச்சி கொடுக்கும். இதற்கு நமக்கு பிடித்த மணமுள்ள சோப்புகளை வாங்கி அதை துணியில் சுற்றி தேவையான இடத்தில் வைத்தாலே போதும். இதை நாம் சிறிய சூ மற்றும் பூட்ஸ்களில் கூட செய்யலாம்.

மரச்சாமான்களில்…

நீங்கள் பெரிய தச்சு வேலை செய்யக் கூடியவர்களாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு ஐ.கே.ஈ.ஏ புத்தக அலமாரியை ஒழுங்குபடுத்த கஷ்டப்படுபவர்களாக இருந்தாலும் சரி, மரத்தில் ஆணி அறைவது என்பது கஷ்டமான செயலாக தான் இருக்கும். இதை எளிதாக மாற்ற ஆணியின் முனைகளில் சோப் கொண்டு தேய்த்தால் ஆணி எளிதாக மரத்தில் செல்லும். மரச்சாமான்கள் செய்யும் இடங்களிலும் இதை பயன்படுத்தலாம். தச்சர்கள் ரம்பத்தின் முனைகளில் இதை தேய்த்து பயன்படுத்துவார்கள். இதனால் ரம்பம் மரத்தை எளிதாக அறுக்கும்.


ஓட்டையை மறைக்க..

நீங்கள் உங்கள் சுவற்றில் ஏதாவது படம் மாட்ட ஆணி அறைந்து பின்னர் கொஞ்சம் நாள் கழித்து நீங்கள் படத்தை அகற்றினால் ஆணி அறைந்த தடம் மட்டும் சுவற்றில் அசிங்கமாக பதிந்து விடும். இதை போக்க சுவற்றின் பெயின்ட் கலரில் உள்ள ஏதாவது சோப் ஒன்றை எடுத்து, பின்னா் அதை அந்த ஓட்டை முழுவதும் அடையும் வரை தேய்த்து , அந்த இடத்தில் மட்டும் மறுபடியும் கொஞ்சம் பெயின்ட் அடித்தால் பிரச்சினை சரியாகிவிடும்.

பெயின்ட் கரை போக்க..

ஏதாவது கண்ணாடி கதவுகளுக்கு அருகில் நீங்கள் பெயின்ட் அடிக்கும் போது, எப்படியும் சிறிது பெயின்ட் கண்ணாடியில் ஓட்டி கொள்ளும். பின்னர் இதை நீக்குவது கடினம். இதை சரி செய்ய ஒரு ஐடியா. பெயின்ட் அடிக்கும் முன்னே கண்ணாடியில் நீங்கள் பார் சோப் கொண்டு தேய்த்து விட்டால், பெயின்ட் அந்த சோப்பில் மட்டும் தான் படும். இதை மிக எளிதாக நீக்கி விடலாம்.

கதவை திறக்க முடியவில்லையா?

உங்கள் கதவு, சாவி போட்டு திறந்து, மூடும் போது கஷ்டப்படுத்துகிறதா? சாவியை ஒரு சோப்பில் நன்கு தேய்த்து பின்னர் இதை கொண்டு கதவை திறக்க முயற்சியுங்கள். பிரச்சினை சரியாகும்.

முகம் பார்க்கும் கண்ணாடி

நீங்கள் சுடுநீரில் குளித்த பின் கண்ணாடி முழுவதும் பனிமூட்டம் போல் ஆகிறதா? இதை போக்க கண்ணாடி காய்ந்து இருக்கும் போதே அதை சோப் கொண்டு நன்கு தேய்த்து பின்னர் தண்ணீர் சேர்க்காமல் துணி கொண்டு துடைத்து விட வேண்டும். அடுத்த முறை குளித்து விட்டு பாருங்கள். பனிமூட்டம் போல் கண்ணாடியில் ஆகாது. இதை நாம் மூக்கு கண்ணாடி மற்றும் கூலிங் கிளாஸ்களிலும் பயன்படுத்தலாம்.

கதவு சிக்கி கொள்கிறதா?

கதவு சிக்கி கொள்ளும் தொல்லையை சோப் கொண்டு சரி செய்து விடலாம். கதவு சுவற்றில் இணையும் ஜாயின்ட்களில் சோப் கொண்டு தேய்த்தால் இந்த பிரச்சினை சரியாகும்.

லீக்கேஜ்ஜை கண்டுபிடிக்க

டயர் அல்லது குழந்தைகளுக்கான குட்டி நீச்சல் தொட்டிகளில் தண்ணீர் லீக் ஆகும் போது எங்கே என்று கண்டுபிடிப்பது சிரமம். இதை சரி செய்ய உங்களுக்கு சந்தேகம் உள்ள இடங்களில் எல்லாம் சோப் கொண்டு நன்கு தேய்த்து விட வேண்டும். இப்படி செய்தால் எங்கே ஓட்டை உள்ளதோ அங்கே பபிள் அல்லது காற்று குமிழ் போல ஏற்படும். இதே போல் கேஸ் டியூப்களில் எங்கே ஓட்டை என்றும் கண்டுபிடிக்கலாம்.


வளர்ப்பு பிராணிகளிடமிருந்து பாதுகாக்க..

உங்கள் வீட்டில் பப்பி, முயல், மற்றும் ஃபெரட் போன்ற செல்ல பிராணிகள் உள்ளதா? அப்போ நீங்கள் கண்டிப்பாக உங்கள் மரச்சாமான்களின் அடிப்பகுதியில் சோப்புகளை கொண்டு நன்கு தேய்த்து விடுங்கள். இதனால் பிராணிகள் இந்த மரச்சாமான்களை எந்த விதத்திலும் சேதப்படுத்தாது.

கைகளின் பாதுகாப்பிற்கு..

நீங்கள் ஏதாவது தோட்ட வேலை செய்ய போகிறீர்களா? அல்லது கார்களை ரிப்பேர் செய்ய போகிறீர்களா? கைகளின் நகம் முழுவதும் கிரீஸ் மற்றும் எண்ணெய் ஒட்டி கொண்டு தொந்தரவு செய்யும். இனி இந்த வேலை பார்க்கும் முன்னரே கைகளை சோப் கொண்டு தேய்த்து விடுங்கள். இதனால் நகங்களிலும் கிரீஸ் அல்லது ஆயில் ஒட்டாது மேலும் கைகளையும் எளிதாக தூய்மை படுத்தி விடலாம்.


செடிகளை பாதுகாக்க…

செடிகள் நிறைந்த இடத்தில் சோப்புகளை கட்டி தொங்க விட்டாலோ அல்லது சோப்புகளை கிரேட் செய்து நிலத்தில் தூவினாலோ, மான்கள் மற்றும் ஆடுகள் நமது ஆசை செடிகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம். பழைய துணி பையில் தொங்க விடுங்கள். மேலும் செடிகளின் அடி தண்டு பகுதியில் சோப் கொண்டு தேய்த்து விட்டால் பூச்சு தொல்லை இருக்காது.

கேம்புக்கு போகிறீர்களா?

எங்காவது கேம்புக்கு போகும் போது இரும்பு அல்லது அலுமினியம் சட்டிகளை நேரடியாக நெருப்பில் வைப்பதால் சட்டிகளின் அடிப்பகுதி கருத்து விடும். இதை சுத்தம் செய்வதும் கடினம். இதற்கு எளிமையான தீர்வு என்னவென்றால் சட்டிகளின் அடிப்பகுதியில் சோப் கொண்டு நன்கு கோட்டிங் கொடுங்கள். சட்டிகளை சுத்தம் செய்வது எளிதாகும்.

ஜிப் திறக்க கஷ்டமாக உள்ளதா?

ஜிப்களின் மேல் சோப் கொண்டு தேய்த்து விட்டால், அதை திறந்து மூடுவது எளிதாகும்.


தையலுக்கு…

நீங்கள் துணிகளை மடித்து தைக்கும் போது சோப் கொண்டு மார்க் செய்தால் தையல் எளிதாகும். மேலும் சோப்பை ஒரு துணியில் சுற்றி நீங்கள் அதை ஊசி மற்றும் குண்டூசிகளை குத்தி வைக்க பயன்படுத்தலாம். இதனால் ஊசி தைக்கும் போது எளிதாக துணிகளுக்குள் செல்லும்.

கறைகளை நீக்க..

கடினமான கறைகளை நீக்குவதற்கு என இப்போது ஜோட் மற்றும் ஃபெல்ஸ் நாப்தா போன்ற சோப்புகள் பயன்படுகிறது. நீங்கள் ஆயில் போன்ற கறைகளை எந்த சோப்புகளையும் கொண்டு நீக்கி விடலாம். கண்டிஷனர் இல்லாத சோப்புகளை பயன்படுத்தினால் இன்னும் சிறந்தது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker