உறவுகள்புதியவை

பெண்களே உணர்வுகளை கணவரிடம் வெளிப்படுத்த தயங்க வேண்டாம்

கணவன் – மனைவி உறவுகளில் கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

கணவன் – மனைவி உறவுகளில் கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொண்டாலே ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க முடியும். கணவன் மனைவி இருவருக்குள்ளும் எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான, ஒளிவுமறைவு இல்லாத தொடர்பாடல் இருக்க வேண்டும். தெளிவாக பேச வேண்டும், உண்மையைப் பேச வேண்டும். ஒருவருக்கு ஒருவர் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்

 

 

 

உங்கள் துணை மீது உள்ள ஆர்வத்தை குறைத்து கொள்ளாதீர்கள். ஆசையை வெளிப்படுத்துதல், கொஞ்சுதல், விளையாட்டாக நடந்துக் கொள்வது என உங்கள் துணை மீதான ஆர்வத்தை வெளிப்படுத்த மறக்க வேண்டாம், மறுக்க வேண்டாம்.

 

 

 

 

உடலுறவு என்பது அவசியமானது தான். ஆனால் துணையாக இருந்தாலும் விருப்பதுடன் இணைவது தான் இனிமை. சரியான நேரங்களில் இருவரின் புரிதலுடன் இணைவது தாம்பத்தியம் சிறக்க உதவும். தாம்பத்தியத்தில் இருவருக்குள்ளும் புரிதல் இருப்பது மிகவும் அவசியமானது.

உங்களின் உணர்வுகளை கணவரிடம் வெளிப்படுத்த தயங்க வேண்டாம். கோபத்தை கொட்டுவது போல, மகிழ்ச்சி, அழுகை, என அனைத்தையும் வெளிப்படையாக காட்டுங்கள். இது தான் உங்கள் இருவர் மத்தியிலான நெருக்கத்தை அதிகப்படுத்தும் கருவி. எந்த ஒரு செயலாக இருப்பினும் அதை தைரியமாக செய்யுங்கள். வேலையாக இருந்தாலும் சரி, இல்லறமாக இருந்தாலும் சரி, தைரியம் தான் உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker