புதியவைமருத்துவம்

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது எப்படி?

பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினம். அதுவும் குறுநடை போடும் நேரத்தில் நிறுத்துவது, அதைவிடக் கடினமானது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் குறுநடை போடும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது மிக முக்கியம். கடினமான செயல் எனினும், சில முயற்சிகள் கொண்டு கீழே உள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குறுநடை போடும் குழந்தைகளை தாய்ப்பாலில் இருந்து நிறுத்திவிடலாம்.

 

 

 

 

முதலில் தாய்ப்பால் நிறுத்த நினைக்கும் போது தாயானவள், தன்னையே முதலில் அறிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உடலில் ஏற்படும் சில மாற்றங்களால், தாய்ப்பாலை இயற்கையாகவே நிறுத்தப்படலாம். இது தாயின் உடல்வாக்கை பொறுத்து அமையும். எப்படி சில உணவு முறைகளால் தாய்ப்பாலை அதிகரிக்கலாமோ, அதே போல் குறைக்கவும் செய்யலாம். புரோட்டீன் உணவுகளை தாய் குறைப்பதன் மூலம் இயற்கையாகவே தாய்ப்பால் குறையும். இல்லையெனில், முட்டைகோஸ் இலையை மார்பக பகுதிகளில் சில மணி நேரங்கள் வைத்து கொள்வதன் மூலமும் பால் குறைய வாய்ப்புள்ளது.

படிப்படியாக மெதுவான முறையில் தாய்ப்பாலை விடுவித்தலால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நல்லது. ஏனெனில் திடீரென நிறுத்துவதால் குழந்தை மற்றும் அம்மா இருவருக்கும், உடலில் சில உபாதைகள் ஏற்படும். முக்கியமாக திடீரென நிறுத்தினால், தாயின் மார்பக குழாயானது அடைபட்டு, வீக்கம் அடைவது அல்லது மார்பக வலி போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே குழந்தைகளுக்கு முன்பு அடிக்கடி கொடுப்பதை நிறுத்திவிட்டு, மதிய வேளையில் இருமுறை கொடுத்தால், அந்த நேரம் ஒரு முறை வேறு ஏதாவது உணவு கொடுத்தும், மறுமுறை தாய்ப்பால் கொடுத்தும் வர வேண்டும். இதை செய்யும் போது, போக போக தாய்ப்பாலை நிறுத்திவிட்டு, உணவுகளைக் கொடுத்து மறக்க வைக்கலாம்.

குழந்தையை உங்கள் மார்பகங்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம். அவர்கள் முன்னிலையில் உடை மாற்றுவது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. குழந்தையுடன் சேர்ந்து குளியல் கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள் தாயின் மார்பகம் பார்ப்பதால், மீண்டும் அவர்களுக்கு தாய்ப்பால் நினைவுக்கு வரும் வாய்ப்புள்ளது.

 

 

 

மேலும் குழந்தையை தூக்கி நடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களை மார்பக பகுதியை தொடாதவாறு பார்த்து கொள்ளவும். அவ்வாறு தூக்கும் போது குழந்தையிடம் ஏதாவது பேசிக் கொண்டு, அவர்களின் கவனத்தை மாற்ற வேண்டும். இதனால் அவர்களை தாய்ப்பாலில் இருந்து மறக்கடிக்கலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker