ஆரோக்கியம்புதியவை

உங்கள் உடம்பு எந்த வகையென்று அறிந்து கொண்டு செயற்படுங்கள்!

உங்கள் உடம்பு வாகு என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க உதவும். உங்கள் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உங்கள் நண்பரின் டயட் முறையை கொண்டு கண்டிப்பாக கரைக்க இயலாது. காரணம் அவரின் உடம்பு வாகுக்கு பொருத்தமான டயட் முறை உங்களின் உடம்பு வாகிற்கு பொருத்தமாக அமையாது என்பது உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் என்ன தான் விழுந்து விழுந்து உடற்பயிற்சி செய்தாலும் சில பேரால் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவர். இதற்கு காரணம் அவர்களின் பரம்பரை உடம்பு வாகு தான். அம்மா அல்லது அப்பா போல் அவர்களின் உடம்பு வாகும் அமைந்திருக்கும்.

உடம்பு வகை

அமெரிக்க உளவியலாளரான வில்லியம் ஹெர்பெர்ட் ஷெல்டன் உடலை மூன்று வகைகளாக வகைப்படுத்துகிறார்.

*எக்டோமார்ப்

*மெஸோமார்ப்

*எண்டோமார்ப்

இந்த கருத்தை மையமாகக் கொண்டு அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழக தகவலின் படி ஊட்டச்சத்து நிபுணர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் டாக்டர்கள் இதைக் கொண்டு ஒரு தனிப்பட்ட ஊட்டச்சத்து திட்டங்களை வடிவமைத்து உள்ளனர்.

எனவே இதைக் கொண்டு உங்களுக்கு ஏதுவான டயட் திட்டங்களை தேர்ந்தெடுக்க இயலும்.குழாய் வடிவ உடல் (எக்டோமார்ப் உடம்பு வகை)

இந்த உடம்பு வாகு கொண்டவர்கள் ரெம்ப ஒல்லியாக காணப்படுவார்கள். இவர்கள் உடல் எடையை கூட்டுவதற்கு சிரமப்படுவார்கள். இவர்கள் மருத்துவரை அணுகி இது குறித்து ஆலோசனை செய்து கொள்ளலாம். இவர்களின் உடம்பில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. எனவே தான் உடல் தசைகள் எடையை பெற மிகவும் சிரமப்படுகின்றனர்.

டயட் முறை

கார்போஹைட்ரேட் :55%
புரோட்டீன் :25%
கொழுப்பு :20%
பரிந்துரைக்கும் உணவுகள்
காய்கறிகள்
மாமிசம்
பால் பொருட்கள் மற்றும் முட்டை
பழங்கள் (அவகேடா) நட்ஸ்
ஆலிவ் ஆயில்
முழு தானியங்கள்

உடற்பயிற்சி

இதய செயல்கள் சிறுதளவு செய்தால் போதும். மேலும் தசை வளர்ச்சிக்கான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். எடையை தூக்கும் உடற்பயிற்சிகள் உங்கள் உடல் வடிவத்தை கட்டுக்கோப்பாகவும் கச்சிதமாகவும் வைக்க உதவும்.

ஆப்பிள் வடிவம் (மெஸோமார்ப் உடம்பு வாகு)

பொதுவாக பெண்கள் இந்த மாதிரியான உடம்பு வாகை பெற்று இருப்பார்கள். இந்த மாதிரியான வடிவத்தில் கொழுப்பு இடுப்பு பகுதியில் தங்கி விடும்.

இதனால் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளும் போது கொழுப்பு அடிவயிற்று பகுதியில் தங்கி தொப்பையை உருவாக்கி விடும். இந்த மாதிரியான உடம்பு வாகு கொண்ட பெண்களுக்கு டயட் முறை

டயட் முறை

கார்போஹைட்ரேட் 40%
புரோட்டீன் 30%
கொழுப்பு 30%
உணவுகள்
பழங்கள் மற்றும் காய்கறிகள்
மாமிசம்
குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்
நட்ஸ் மற்றும் விதைகள்
முழுதானியங்கள்
பருப்பு வகைகள்

உடற்பயிற்சி

இந்த வகை உடம்பு வாகு கொண்டவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். காரணம் எளிதாக அவர்கள் உடம்பை கச்சிதமாக மாற்றலாம்.

தினசரி உடற்பயிற்சி, தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் வலுவேற்றுதல் போன்றவற்றின் மூலம் பெறலாம்.

இதய செயல்பாடுகள் மற்றும் வலுவேற்றும் உடற்பயிற்சியை இணைந்து செய்ய வேண்டும் யோகா மற்றும் பைலட் பயிற்சிகள் மூலம் உடலை கட்டுக்கோப்பாக வைக்க இயலும்.

பேரிக்காய் வடிவம் (எண்டோமார்ப் உடம்பு வாகு)

இந்த மாதிரியான உடம்பு வாகு மெதுவான மெட்டா பாலிசத்தை குறிக்கிறது. அதிகமான உடல் எடை மற்றும் உடல் பருமன் கொண்டு காணப்படுவர். நீங்கள் கண்டிப்பாக ஒரு நாளைக்கு 200-500 கலோரிகள் வரை குறைக்க வேண்டியதிருக்கும். அதே நேரத்தில் நீங்கள் உணவில் உப்பின் அளவை குறைத்து சாப்பிட வேண்டும். இல்லையென்றால் நீர் தேக்கம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

உணவுகள்

ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள்
ஆலிவ் ஆயில்,
அவகேடா
நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள்
முழு தானியங்கள்
மாமிசம்
தவிர்க்க வேண்டியவை
ஜங்க் ஃபுட்,
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
சோடியம் உணவுகள்
செயற்கை குளிர்பானங்கள்
ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள்

உடற்பயிற்சி

நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். மிதமான முறையில் ஏரோபிக் போன்ற உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். நடத்தல், ஜாக்கிங் அல்லது பைக்கிங் போன்றவை உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

நீங்கள் உடல் எடையை குறைத்த பிறகு தசைகளை வலுவாக்கும் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரலாம்.

கண்டிப்பாக நாம் இதில் எதாவது ஒரு உடம்பு வாகை பெற்று இருப்போம். எனவே இனி உங்கள் டயட் திட்டங்களை அதற்கேற்றாற் போல் செயல்படுத்துங்கள். இனி நீங்களும் கட்டுடல் மேனியுடன் வலம் வரலாம்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker