ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
ஆண்களைத் தாக்கும் பொதுவான புற்றுநோய்களில் புரோஸ்டேட் புற்றுநோயும் ஒன்று. ஆண்களின் இந்த புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனை ஏற்பட்டால், அது சிறுநீர் மற்றும் பாலியல் பிரச்சனைகளை உண்டாக்கும்.
எனவே ஆண்கள் அனைவருமே தங்களின் புரோஸ்டேட் சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சில உணவுகளை சாப்பிட வேண்டும்.
கடல் உணவுகள்
மீன்கள், பிரேசில் நட்ஸ், பூண்டு போன்றவற்றில் செலினியம் சத்து அதிகம் உள்ளது. இந்த செலினியம் சத்து உடலில் உள்ள செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நல்ல பாதுகாப்பை அளிக்கிறது.
இத்தகைய உணவுகள் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆனால் இந்த செலினியம் சத்து மிக்க உணவுகளை அளவோடு எடுத்துக் கொண்டால் மட்டுமே அதன் பலன்களை பெற முடியும்.
பழங்கள்
லைகோபைன் சத்துக்கள் நிறைந்த தக்காளி, தர்பூசணி, திராட்சை போன்றவற்றில் வளமான அளவில் நிறைந்துள்ளது.
இந்த லைகோபைன் உணவுகளை சாப்பிட்டால் புரோஸ்டேட் புற்றுநோய் வருவதை தடுக்க உதவுகிறது. ஆனால் இந்த உணவுகளை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.
காய்கறிகள்
காய்கறியில் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றில் நார்ச்சத்து, விட்டமின் C, ஃபோலேட், கால்சியம், பீட்டா-கரோட்டீன், போன்றவை ஏராளமான அளவில் உள்ளது.
இதனை சாப்பிட்டு வயிற்றில் இது செரிமானமாகும் போது, வெளியிடப்படும் ஒரு பொருள், புற்றுநோயை எதிர்ப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
க்ரீன் டீ
பாலிஃபீனால்கள் சத்துக்கள் நிறைந்த க்ரீன் டீ, ஆப்பிள், ப்ளூபெர்ரி, மாதுளை, கிரான்பெர்ரி, சோயா போன்றவை ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி, உடல் செல்களுக்கு பாதுகாப்பு அளித்து, புற்றுநோய் செல்கள் பெருக்கமடையாமல் தடுத்து அழித்து, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
இஞ்சி
நம் உடலை தாக்கும் நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கு அழற்சி எதிர்ப்பு சக்தி உடலுக்கு மிகவும் அவசியம். அதனால் இஞ்சி, வெங்காயம், பெர்ரிப் பழங்கள், பூசணி விதைகள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
குறிப்பு :
மாட்டிறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவற்றை தவிர்த்து, முழு தானிய உணவுகளான முழு கோதுமை பிரட், திணை, ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி மற்றும் நட்ஸ்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.