ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..!
அந்தரங்க நோய்கள் (பாலியல் நோய்கள்- Male sexual diseases) பற்றி ஆண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பிற பெண்களுடன் உறவு கொள்வதில்லை என்றாலும் கூட தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் தவறான உறவால் மட்டுமின்றி, தவறான அணுகுமுறையும் கூட சில நோய்களை உண்டாக்கும். இதைப் ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கிளமீடியா என்னும் பாக்டீரியல் நோய்த்தொற்று, இந்நோய் பரவியுள்ள ஒருவருடன் உறவு கொள்ளும்போது , உண்டாகும். இந்நோய்த் தொற்றால், ஆணுறுப்பில் எரிச்சல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், விறைப்பை வீக்கம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்
மேகவெட்டை என்பதும் ஒருவகையான போலியல் நோய். தவறான உடலுறவால் தான் இதுவும் உண்டாகின்றது. பெரும்பாலான ஆண்களுக்கு இந்நோய் உண்டாகின்றது.
இந்நோய் இருந்தால் விறைப்பை வீக்கமும் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.
தவறான உடல் சேர்க்கையால் உண்டாகும் உயிர்க்கொல்லி நோய் தான் எய்ட்ஸ். இந்நோய் உண்டானால் அதிகப்படியான காய்ச்சலும் திடீரென உடல் எடை குறைவும் உண்டு. இந்நோய் வெளியில் தெரியவே 10 வருடங்கள் ஆகும்.
மேகப்புண் நோய் தகாத உடலுறவால் உண்டாகும். இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்யவில்லையெனில் கண் பார்வை குறைபாடு, காது கேளாமை உண்டாகும். இறுதிக்கட்டத்தில் மூளையை பாதிக்கும் அபாயம் கூட உண்டு என்று கூறப்படுகின்றது.