இனி பரு வந்தா வீட்ல இருக்கிற ஆஸ்பிரின் மாத்திரை எடுத்து இப்படி தேய்ங்க போதும்…
இது மட்டும் கையில் இருந்தால் போதும் உங்கள் முகப் பருக்களை நீக்கி பொலிவாக்கலாம். உங்களுக்கு எதாவது காய்ச்சல் அல்லது உடம்பு சரியில்லை என்றால் முதலில் எடுப்பது இந்த அஸ்பிரின் மாத்திரைகளைத் தான். மருத்துவ நன்மைகளுக்கு மட்டுமல்ல அழகு பராமரிப்பிலும் இதன் பங்கு மிகவும் முக்கியமானது.ஆமாங்க உங்கள் முகத்தில் தோன்றும் வலி மிகுந்த பருக்களை போக்கி மாசு மருவற்ற அழகான முகத்தை கொடுக்கிறது. முகப்பருக்களால் உங்கள் முகத்தில் தோன்றும் தழும்புகளை சில நாட்களிலேயே மறையச் செய்து புதுப் பொலிவை தருகிறது. சரி வாங்க இந்த அஸ்பிரின் மாத்திரைகளை எப்படி முகப்பருக்களில் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
நல்லதா? கெட்டதா? இதிலுள்ள சாலிசைலிக் அமிலம் பருக்களை எதிர்த்து போரிடுகிறது. மேலும் இது ஒரு அழற்சி எதிர்ப்பு பொருள் என்பதால் பருக்கள் மீண்டும் மீண்டும் பரவுவதை தடுக்கிறது. கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், தழும்புகள், பருக்கள் போன்ற எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே நேரத்தில் முற்றுப்புள்ளி வைக்கிறது உங்கள் முகம் கோரமாகக் காணப்பட காரணமான பருக்களை நீக்கி மற்றவர்கள் முன்னிலையில் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கிறது. விலை மலிவான இந்த ஒரு பொருள் போதும் உங்கள் அழகிய முகத்தை நீங்கள் காணுவதற்கு. நன்மைகள் பருக்களை நீக்குவதோடு முக சருமத்தை மிருதுவாக்கி பொலிவை கொடுக்கிறது.
உங்கள் சருமத்திற்கு தகுந்த மாதிரி இந்த மாத்திரையை மற்ற பொருட்களுடன் கலந்து பேஸ் பேக் கூட தயாரிக்க இயலும். இந்த பேஸ் பேக்கள் அடைப்பட்ட சரும துவாரத்தை சுத்தமாக்கி பருக்களை குறைக்கிறது. அஸ்பிரின் பேஸ் மாஸ்க்ஸ் அஸ்பிரின் பேஸ்ட் தேவையான பொருட்கள் 5 அல்லது 6 அஸ்பிரின் மாத்திரைகள் கொஞ்சம் தண்ணீர் ஆப்பிள் சிடார் வினிகர் பயன்படுத்தும் முறை கொஞ்சம் தண்ணீரை அஸ்பிரின் மாத்திரையில் ஊற்றி கரைக்க வேண்டும். உங்கள் முகப் பரு மிகவும் மோசமான நிலையில் இருந்தால் தண்ணீருக்கு பதிலாக ஆப்பிள் சிடார் வினிகரை சேர்க்கவும். இது எரிச்சலுடைய உங்கள் சருமத்திற்கு நிவாரணம் அளிப்பதோடு சரும துவாரங்களையும் சுத்தமாக்குகிறது. அஸ்பிரின் மாத்திரைகளை கரைக்க சரியான அளவில் தண்ணீரை பயன்படுத்துங்கள். கட்டியில்லாமல் விரல்களைக் கொண்டு குழைத்து கொள்ள வேண்டும். உங்களுக்கு எண்ணெய் பசை மற்றும் காம்பினேஷன் சரும வகை என்றால் இதனுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கொள்ளுங்கள். வறண்ட சருமத்திற்கு ஆலிவ் ஆயில் சேர்த்து அஸ்பிரின் மாத்திரையை கண்ணில் படாதவாறு முகத்தில் தேய்க்க வேண்டும். 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு மென்மையான துணியை கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை என பயன்படுத்தி வந்தால் பருக்கள் குறைவதோடு உங்கள் சருமமும் பட்டு போன்று மென்மையாக ஜொலிக்கும்.
அஸ்பிரின் மற்றும் லெமன் ஜூஸ் தேவையான பொருட்கள் 1 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் 1 டீ ஸ்பூன் தயிர் 5-6 அஸ்பிரின் மாத்திரைகள் பயன்படுத்தும் முறை அஸ்பிரின் மாத்திரைகளை நொறுக்கி லெமன் ஜூஸில் ஊற வைக்கவும். சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு லெமன் ஜூஸ் மிகவும் ஏற்றது. லெமன் ஜூஸ் சருமத்திற்கு நல்ல நிறத்தையும் மிருதுவான தன்மையும் கொடுக்கிறது.மறுபுறம் அஸ்பிரின் புத்துணர்ச்சியை தருகிறது. இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
அஸ்பிரின் மற்றும் தேன் தேவையான பொருட்கள் 1 டீ ஸ்பூன் ஆர்கானிக் தேன் 5-6 அஸ்பிரின் மாத்திரைகள் பாதாம் ஆயில் பயன்படுத்தும் முறை அஸ்பிரின் மாத்திரை பொடியை தண்ணீரில் குழைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். அதனுடன் தேன் கலந்து நன்றாக கலக்கவும். பிறகு அதனுடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்க்கவும். தேன் பருக்களை எதிர்த்து போராடுவதோடு சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது. ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பருக்கள் பரவுவதை தடுக்கிறது. இது வறண்ட சருமத்திற்கு மிகவும் சிறந்தது.
இதை அப்ளே செய்து 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பேக்கிங் சோடா மற்றும் அஸ்பிரின் தேவையான பொருட்கள் 6-12 அஸ்பிரின் மாத்திரைகள் 1 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா 1 கப் தண்ணீர் பயன்படுத்தும் முறை ஒரு பெளலை எடுத்து அதில் அஸ்பிரின் மாத்திரைகளை ஸ்பூனின் பின்புறம் கொண்டு பொடியாக்கி கொள்ளவும். மற்றொருபுறம் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை ஒரு காட்டன் பஞ்சை கொண்டு முகத்தில் அப்ளே செய்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு பேக்கிங் சோடாவை கொண்டு சுத்தம் செய்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். இந்த மாஸ்க் சருமத்தை புதுப்பித்தல், ஆன்டி பாக்டீரியல் ஏஜெண்ட்டாக செயல்படுகிறது. பேக்கிங் சோடா ஒரு இயற்கை ஸ்க்ரப் மாதிரி செயல்படுகிறது. டூத் பேஸ்ட் மற்றும் அஸ்பிரின் தேவையான பொருட்கள் 5-6 அஸ்பிரின் மாத்திரைகள் டூத் பேஸ்ட் செய்முறை ஆர்கானிக் பேஸ்ட்டை எடுத்து அதை ஒரு தட்டில் பிதுக்கி வைத்து கொள்ளுங்கள்.
அஸ்பிரின் மாத்திரைகளை நுனிக்கி தண்ணீரில் சரியான பதத்திற்கு கலந்து கொள்ளவும். டூத் பேஸ்ட் கலவையை இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். பருக்கள் மற்றும் முகத்தில் இந்த பேஸ்க்கை தடவி 15 நிமிடங்கள் வைத்து இருக்க வேண்டும். பிறகு ஒரு ஈரமான துணியை கொண்டு துடைத்து எடுக்கவும். டூத் பேஸ்ட் உங்கள் பருக்களை காய வைத்து அதன் எரிச்சலிருந்து சருமத்தை காக்கிறது. மேலும் இது ஒரு ஆன்டி பாக்டீரியல் பொருள். ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் அஸ்பிரின் தேவையான பொருட்கள் 5-6 அஸ்பிரின் மாத்திரைகள் ஹைட்ரஜன் பெராக்சைடு கற்றாழை ஜெல் பயன்படுத்தும் முறை அஸ்பிரின் மாத்திரைகளை ஸ்பூனின் பின் பகுதி கொண்டு நொறுக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சரியான பதத்திற்கு கலந்து கொள்ளவும். கற்றாழை ஜெல் எடுத்து தனியாக வைத்து கொள்ளுங்கள் அஸ்பிரின் பேஸ்ட்டுடன் ஹைட்ரஜன் பெராக்சைடு துளிகளை சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து முகத்தில் தடவவும். கொஞ்சம் நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். பிறகு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி காய்ந்ததும் நீரில் கழுவவும். சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி பருக்களை உலர வைத்து வெள்ளை புள்ளிகளை நீக்குகிறது. பிறகு கற்றாழை ஜெல் அப்ளே செய்யும் போது முகத்திற்கு ஈரப்பதம் கிடைக்கிறது. சூனிய வகை காட்டுச் செடி மற்றும் அஸ்பிரின் தேவையான பொருட்கள் 120 மில்லி லிட்டர் டிஸ்டில்டு வாட்டர் 4 அஸ்பிரின் மாத்திரைகள் 350 மில்லி லிட்டர் சூனிய வகை காட்டுச் செடி சாறு பயன்படுத்தும் முறை ஒரு பாட்டிலை எடுத்து அதில் டிஸ்டில்டு வாட்டரை நிரப்ப வேண்டும். அஸ்பிரின் மாத்திரைகளை நொறுக்கி அதில் போட்டு நன்றாக குலுக்க வேண்டும். பிறகு சூனிய வகை காட்டுச் செடி சாறு கலந்து நன்றாக குலுக்கி ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி நன்றாக காய விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இந்த செடியில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் பொருள் பருக்கள் மற்றும் சரும அழற்சியை எதிர்த்து போரிடுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை கொல்லுகிறது.
யோகார்ட் மற்றும் அஸ்பிரின் தேவையான பொருட்கள் 1 டீ ஸ்பூன் யோகார்ட் 5-6 அஸ்பிரின் மாத்திரைகள் பயன்படுத்தும் முறை அஸ்பிரின் மாத்திரைகளை நொறுக்கி தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். இதனுடன் யோகார்ட் சேர்த்து நன்றாக கலக்கவும் இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். யோகார்ட் முகத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்பை சரி செய்தல், சருமத்திற்கு நிறமூட்டுதல் போன்ற வேலைகளை செய்கிறது. இதர வழிகள் அஸ்பிரின் பேஸ் மாஸ்க்களை தவிர அஸ்பிரின் ஸ்க்ரப் கட தயாரிக்கலாம். அஸ்பிரின் ஸ்க்ரப் தேவையான பொருட்கள் 2-3 அஸ்பிரின் மாத்திரைகள் 1/2 கப் தண்ணீர் பயன்படுத்தும் முறை அஸ்பிரின் மாத்திரைகளை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும் இதை அப்படியே பருக்களின் மீது தடவி வந்தால் பருக்கள் மாயமாய் மறைந்து போகும்.
அஸ்பிரின் மாத்திரை பொடியை கூட ஸ்க்ரப் மாதிரி தினசரி பயன்படுத்தி வரலாம். அஸ்பிரின் டோனர் தேவையான பொருட்கள் 2-3 அஸ்பிரின் மாத்திரைகள் 1 கப் தண்ணீர் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் 2-3 சொட்டுகள் டீ ட்ரி எஸன்ஷியல் ஆயில் 2-3 சொட்டு சூனிய வகை செடி ஆயில் பயன்படுத்தும் முறை அஸ்பிரின் மாத்திரைகளை நொறுக்கி கொள்ளுங்கள் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் எஸன்ஷியல் ஆயில் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும் மாத்திரை பொடியை இதனுடன் கலக்கவும் இதை முகத்தில் நன்றாக ஸ்பிரே செய்யவும் நீண்ட நேரத்திற்கு நறுமணம் அளிப்பதோடு நல்ல பொலிவையும் கொடுக்கும்.
கவனத்தில் வைக்க வேண்டியவை அஸ்பிரின் மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு முன் கொஞ்சம் பொடியை சருமத்தில் தடவி ஒத்து கொள்கிறதா அல்லது அழற்சி உண்டாகிறதா என்று பார்த்து விட்டு உபயோகிக்கவும் இதை பயன்படுத்தும்போது கண்டிப்பாக உங்கள் கண்களிலோ அல்லது மூக்கிலோ படாதவாறு பயன்படுத்த வேண்டும். இந்த பகுதிகளில் பட்டு விட்டால் உடனே கழுவி சுத்தம் செய்து விட்டு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்வது நல்லது. எனவே அஸ்பிரினை கவனமாக பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக நிறைய பலனை அடையலாம். இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க உங்கள் மாசு மருவற்ற அழகிய முகத்தை உலகிற்கு காட்ட முயற்சி எடுங்கள்.