இப்படி உங்க கன்னமும் புஷ்புஷ்னு ஆகணுமா?… அப்போ இந்த பொருளை உடனே வாங்கி சாப்பிடுங்க
உலகில் இன்று அதிக அளவில் நடக்கும், வெற்றிகரமான வியாபாரம் எது தெரியுமா? பெண்களின் அழகுசாதன பொருட்கள். காஸ்மெடிக் எனும் இந்த அழகுசாதன வியாபாரத்தில், ஸ்கின்கேர் எனும் சரும பாதுகாப்பு பொருட்கள் மட்டும், கிட்டத்தட்ட முப்பத்தாறு சதவீதம் உலக அளவில் விற்பனையாகின்றன.
உலகில் எப்போதும் இளமையாகவே இருக்கும் சில விசயங்களில், காலங்கள் கடந்தாலும், மாறாத காதலும், பெண்களின் மேக்கப்பும் அவற்றில் முக்கியமானவை.
மேக்கப்
பெண்களின் சிகை அலங்காரம், முக அலங்காரம் பற்றி, சங்ககாலத்தமிழ் இலக்கியங்களிலும், குறிப்புகள் உள்ளதில், ஆச்சரியமில்லைதானே! பெண்கள் அக்காலத்தில், நீண்ட கூந்தலுக்கும், முக அழகுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். தற்காலத்தில், கூந்தல் அலங்காரம் என்பது, தலைமுடிகளை வெட்டி அழகுபடுத்தவே, எனும் நவீன சிந்தனைகளில், அடங்கிய பின், தலைமுடி பராமரிப்பிற்கும், முக அலங்காரத்திற்கும், ஏகப்பட்ட உலகளாவிய அழகுசாதன தயாரிப்புகள், நம் நாட்டில் குவிந்து கிடக்கின்றன.
அகத்தின் அழகு, முகத்தில் தெரியும்.
அகத்தின் அழகு, முகத்தில் தெரியும் என்ற பொன்மொழி, தற்காலத்தில், பலவித விளக்கங்களுடன் சொல்லப்பட்டு வந்தாலும், முதன்மையான பொருள், உடலின் உள் உறுப்புகள் செறிவாக, ஆரோக்கியமாக இருந்தால், முகம், பொலிவாக, பிரகாசிக்கும் என்பதே! ஆயினும் சிலர், நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அதுவே முகத்திலும் தெரியும், மனதின் தன்மையை, முகம் மறைக்காமல், வெளிக்காட்டிவிடும் என்பார்கள். அதுவும், ஒருவிதத்தில் உண்மையாக இருக்கக் கூடும், சிலர் முகம் வாட்டமாக இருப்பதற்கு, மற்றவரிடம் காணும் குறைகளைவிட, தம் உடல் பாதிப்புகளே, முகத்தில் வெளிப்படக் கூடும். இதுபோல, பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்றாக, அவர்களை பாதிக்கச்செய்வது, பொலிவிழந்து வற்றிய முகமும், ஒடுங்கிய கன்னங்களும்.
ஒட்டிய கன்னங்கள்.
ஒட்டிய கன்னங்கள் பெண்களுக்கு மட்டுமல்ல,ஆண்களுக்கும் மனதை அமைதியிழக்கச் செய்கிறது. சில பெண்கள், அளவான உடலுடன், பொலிவான சருமத்துடன் இருந்தாலும், அவர்களுக்கு, முழுதும் திருப்தி ஏற்படாமல், எதையோ பறிகொடுத்தது போலவே, இருப்பார்கள். என்னதான் உடல் அழகாக இருந்தாலும், பெண்களின் இளமையை, அழகு பூரிப்பை, உலகுக்கு காட்டுவது, அவர்களின் கொழுகொழு கன்னங்கள் தானே!, அந்த கன்னங்கள் ஒட்டிப்போய், முகம் பார்க்கவே, இலட்சணமின்றி இருந்தால், அது அவர்களின் மிகப்பெரிய மனப்பிரச்னையாகி, அதைத்தீர்க்க, பலவித அழகு க்ரீம்களை முகத்தில், பூசி, முகத்தை இன்னும் விகாரமாக்கிவிடுகிறார்கள்.
தைராய்டு பிரச்னை
உடலில் வைட்டமின், புரதம் மற்றும் தாதுக்களில் குறை ஏற்படும்போது, தோல் சுருங்கி, முகம் ஒடுங்கிவிடுகிறது. தைராய்டு, இரத்த அணு குறைபாடு போன்ற காரணங்களினாலும், பெண்களின் முகம் ஒட்டிப்போகலாம். உடலில் பிராணவாயு சீராகப் பரவ வாய்ப்பில்லாமல், இரத்த ஓட்டம் தடைப்படும்போதோ, இரத்தத்தில் நச்சுக்கள் கலக்கும்போதோ, உடல் உள் உறுப்புகள் பாதித்து, அதனால், முக சரும பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தானியங்கள்
உடலுக்கு நன்மைகள் தரும், வைட்டமின் சத்துக்களையும், ஆற்றல் தரும் புரதம் மற்றும் தாதுக்களையும் அதிகரிக்க, கீரைகள், நார்ச்சத்துமிக்க கேழ்வரகு, சாமை போன்ற தானியங்களை உணவில் சேர்க்க, உடலில் வியாதி எதிர்ப்புத் தன்மை மேலோங்கி, இரத்த ஓட்டம் சீராகி, உடல் உள்ளுறுப்புகள் இயல்பாகி, உடல்நல பாதிப்புகள் நீங்கிவிடும்.
பாதாம் பருப்பு
பொதுவாக நாம் வீட்டில் ஆப்பிள், ஆரஞ்சு, கேரட் இவற்றை ஜூஸாக்கி சாப்பிடுவோம். அதிலும் இந்த கோடைகாலத்தில் தினமும் பழச்சாறு அருந்தும் பழக்கம் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். வெறும் பழச்சாறு மட்டும் குடிக்காமல், அத்துடன் பாதாம் பருப்பை சேர்த்து அரைத்துப் பருகி வரலாம்.
லெமன்
தினமும் காலையில் எழுந்ததும் மிதமான சூடுள்ள நீரில், எலுமிச்சை சாற்றை இட்டு, அதில் சிறிது தேனைக் கலந்து, பருகி வரலாம். இவை, இரத்த ஓட்டத்தை சீராக்கி, சரும பாதிப்புகளை சரிசெய்யும் ஆற்றல் மிக்கவை. தூங்கி எழுந்ததும்இதை செய்யும் போது ரத்த ஓட்டம் சீராவதோடு உடல் சுறுசுறுப்பாகவும் இருக்கவும்.
நல்ல தூக்கம்
தினமும் ஆறு மணி நேரத்துக்கு குறையாத தூக்கமும், மனக் கவலையற்ற வாழ்க்கை முறையும், நேர்மறை மன நிலையும், உடல் நலனை காக்கும் சில, நல்ல செயல்களாகும். பொலிவான முகத்தையும், சதைப்பற்றுமிக்க கன்னங்களையும் அடைய. அதிக விலையுள்ள பல்வேறு கிரீம்கள், முகப்பூச்சுக்கள் போன்ற செயற்கை வழிகளில் முயன்றும், முகத்தின் வனப்பை அடைய முடியாமல், தவிக்கும் பெண்கள், இந்த சிறு வழிமுறையைக் கையாண்டு, தங்கள் முக எழிலை, திரும்பப் பெறலாம்.
சப்போட்டா பழம்
சப்போட்டா பழங்களை, சத்துக்கள் நிறைந்த சுவையான பழம் என்று நாம் நினைத்திருப்போம், ஆயினும், சருமத்தை பொலிவாக்கி, இரத்த ஓட்டத்தை தூண்டி, சதைப்பற்றை அதிகரிக்கும் என்பது, நமக்கு ஆச்சரியமாகத்தானே, இருக்கும்! சப்போட்டாவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள், வளர்சிதை மாற்றத்தை தூண்டி, எலும்புகளை உறுதியாக்கி, உடல் தசைகளை வலுவாக்கி, சருமத்தைப் பொலிவாக்கும்.
சப்போட்டா பேஸ்ட்
தோல் நீக்கிய சப்போட்டா பழத்தை நன்கு குழைத்து, அதில், இழைத்த சந்தனம் அல்லது தூய சந்தனத் தூளை சேர்த்து, அத்துடன் ரோஸ் வாட்டர் எனும் சுத்தமான பன்னீரைக் கலந்து, முகத்தில் மென்மையாக பூசவும். ஒட்டிய கன்னங்களில், பேஸ்ட் போல, இந்தக் கலவையை தடவ வேண்டும். கால் மணி நேரம் ஊறியபின், இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவலாம். இது போல, ஓரிரு முறை ஒரு வாரத்தில் செய்து வர, முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கொலாஜன் எனும் புரதச்செல்கள் உற்பத்தி சீராகி, ஒட்டிய கன்னங்களில் சதைகள், வனப்பாக வெளிப்பட ஆரம்பிக்கும்.
சப்போட்டா- பாசிப்பயறு
சப்போட்டாவை, பச்சைப் பயிற்று மாவுடன், சிறிது விளக்கெண்ணை விட்டு, விழுதாக்கி, கைவிரல்கள், நகங்கள், கால்களில் இதமாக தடவி, ஊறிய பின், குளித்துவர, வறண்ட தோல் மென்மையாகி, விரல் நகங்கள் பொலிவாகும். சப்போட்டாவை தினமும், சாப்பிட்டுவர, உடலாற்றல் மேம்பட்டு, மலச்சிக்கல் நீங்குவதால், உடலிலுள்ள பல பாதிப்புகளில் இருந்து, நிவாரணம் கிடைக்கும்.
இந்துப்பு
சப்போட்டா மட்டுமல்ல. இளம் சூடான நீரில், சிறிது தேன் மற்றும் இந்துப்பு போட்டு நன்கு கலக்கி, அந்த நீரை வாயில் சற்றுநேரம் வைத்திருந்து, நன்கு வாய் கொப்பளித்துவர, கன்னங்கள் பூரித்து புஷ்ஷென்று ஆகும்.
வெண்ணெய்
நன்கு திரண்ட வெண்ணையுடன் சிறிது, நாட்டு சர்க்கரை சேர்த்து, மிக்சியில் மையாக அரைத்து, முகத்தில் தடவி, சற்றுநேரம் கழிந்தபின், முகத்தை இளஞ்சூடான நீரில் அலச, கன்னங்கள் எதிர்பார்த்தது போல, ஷைனிங் ஆகும்.
கேரட் ஜூஸ்
ஆப்பிள் அல்லது கேரட்டை சாறெடுத்து, அந்தச் சாற்றில், சிறிது தேனைக் கலந்து, கன்னங்களில் மென்மையாகத் தடவி, சற்று நேரம் ஊறிய பின், முகத்தை இதமான சுடுநீரில் அலசிவர, முகச்சுருக்கங்கள் மறைந்து, முக சதைகள், பொலிவாகும்.
பாதாம் பேஸ்ட்
பன்னீரில், நன்கு மையாக அரைத்த பாதாம் பருப்பு கலவையை சேர்த்து, பேஸ்ட் போல, முகத்தில் தடவி வரலாம். சற்று நேரம் ஊறியபின், முகத்தை அலச, முகம் பொலிவாக மாறும். அப்புறம் பாருங்க! இந்த மல்கோவா கன்னத்துக்கு என்ன செய்யறீங்கன்னு ஊரே உங்களப் பார்த்துதான் கேட்கும்.