ஆரோக்கியம்

இந்த பிரச்சனை உங்களிடம் இருந்தால், மக்கள் நெருங்கி பழக வெறுப்பார்கள்!

சமூக விருந்து, வேலை செய்யும் இடம் மற்றும் குடும்ப விழாக்களில் நீங்கள் மற்றவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்ப்பவரா ? உங்களுக்கு இருக்கும் சுகாதார சிக்கல்கள் சமூகத்தில் இருந்து உங்களை விலக்கி வைக்கிறது. இங்கே 5 வித சுகாதார சிக்கல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை சமூகத்தில் உங்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குபவையாக உள்ளன. அவற்றை பற்றி இப்போது காண்போம்.

1. வாய் துர்நாற்றம் :

ஹலிடோசிஸ் என்று அழைக்கப்படும் வாய் துர்நாற்றம் , சமூகத்தோடு இணையும் போது ஒரு வித தர்மசங்கடத்தை உண்டாக்கும். வாழ்க்கையின் தரத்தை குறைக்கக் கூடியதாக இருக்கும். வாய் துர்நாற்றதிற்கான முதல் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, வாயின் நலத்தை பாதுகாக்காமல் விடுவது தான். வாய் வழி சுகாதாரத்தில் குறைபாடு, மற்றும் பல் தேய்ப்பதில் குறைபாடு போன்றவை உணவு துகள்களை வாயிலேயே விட்டு விடுகின்றன.இந்த உணவு துகள்கள், கிருமிகளின் ஆதாரமாக விளங்கி , துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. வாய் வழி சுகாதாரத்தை பாதுகாப்பதும், பல் மருத்துவரிடம் அடிக்கடி சென்று பரிசோதித்துக் கொள்வதும் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகும்.



2. உடல் துர்நாற்றம் :

தனது உடல் துர்நாற்றம் பற்றி அறிந்தவர்கள் சமூகத்துடன் நெருங்கி பழகுவதை தவிர்ப்பார்கள். உடல் துர்நாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுவது வியர்வை. ஆனால், வியர்வை என்பது எந்த ஒரு வாசனையும் அற்றது. வியர்வையுடன் சில கிருமிகள் வினை புரியும்போது, உடலில் துர்நாற்றம் வீச தொடங்குகிறது. இதனால் உடலின் சில பகுதிகள் குறிப்பாக வியர்வை அதிகமாக இருக்கும் இடங்களில்(அக்குள் பகுதி) துர்நாற்றம் வீசுகிறது. உடல் சுகாதாரத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த துர்நாற்றத்தை தடுக்கலாம். தொடர்ந்து குளிப்பதும், சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும் கிருமிகளைப் போக்கும் வழிகளாகும். இதனால் துர்நாற்றம் கட்டுபடுத்தப்படுகிறது.

3. பற்கூச்சம் :

குடும்பத்தினருடன் திருமண விழாவில் ஐஸ் க்ரீம் சாப்பிடுவதும், நண்பர்களுடன் சூடான காபியை உறிஞ்சுவதும் அலாதியான சந்தோசம் தரும். ஆனால் இவைகளால் பற்கூச்சம் உண்டாகும் என்பது உங்களுக்கு தெரியும் போது அந்த சந்தோஷத்தை உங்களால் அனுபவிக்க முடியாது. பற்கூச்சம் இருக்கும்போது, அவர்கள் குளிர்ச்சியான மற்றும் சூடான பொருட்களை எடுத்துக் கொள்ள முடியாது. இதனால் அவர்களின் சமூக தொடர்பும் தவிர்க்கப்படுகிறது. இதனால் அவர்களின் தன நம்பிக்கை குறையும் வாய்ப்பும் உண்டாகிறது. சமூகத்தோடு இணைந்து இருப்பது அவர்களுக்கு ஒரு வித சங்கடத்தை அளிக்கிறது. பற்கூச்சம் என்பது பற்களின் எனமேல் தேய்ந்து போகும்போது உண்டாகிறது. நாட்கள் செல்ல செல்ல இது மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. இது சரி செய்யக் கூடிய ஒரு பிரச்சனை தான். மிக எளிதான தீர்வுகள் இதற்கு உண்டு. பல் மருத்துவரை அணுகி இதற்கான சிகிச்சை பெறுவதால், இது தீரும். மருத்துவர் பற்கூச்சம் குறைக்கும் பேஸ்டை பரிந்துரைக்கலாம். இதனால் பற்கூச்சம் கட்டுப்படுகிறது.



4. மஞ்சள் பற்கள் :

வெள்ளைப் பற்களுடன் கூடிய பிரகாசமான சிரிப்பு ஒரு வித தன்னம்பிக்கையை தரும். மேலும் உங்களை இளமையாக காட்டும். மஞ்சள் பற்களை கொண்டவர்கள் சிரிப்பதை தவிர்ப்பார்கள் . வெளியில் தமது பற்கள் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். உங்கள் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறத்திற்கான காரணம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? இதற்கு பல காரணங்கள் உண்டு, டீ, காபி, கோலா போன்றவற்றை பருகுவது, புகையிலை பயன்படுத்துவது மற்றும் பல் சுகாதாரத்தை மோசமான பேணுவது போன்றவை பற்களின் நிறமாற்றத்திற்கு காரணங்கள் ஆகும்.உங்கள் வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்போது, பற்களின் நிறமாற்றத்தை தடுக்கலாம். உதாரணத்திற்கு, டீ , காபி பருகுவதை முற்றிலும் தவிர்க்கலாம். வெண்மை படுத்தும் பற்பசையை பயன்படுத்துவதால் பற்கள் நிறமும் வெண்மையாகும் . மேலும் உங்கள் சிரிப்பும் பிரகாசமாகும்.

5. பருக்கள் :

கட்டி அல்லது பருக்கள், பதட்டம், சங்கடம் என்று பல்வேறு உணர்வுகளை சமூகத்தில் வெளிபடுத்தும். பருக்கள் உண்டாவதால் மன அழுத்தம் அதிகரிக்கிறது, நண்பர்களுடன் பழகுதல் குறைகிறது, வேலை இடங்களில் மற்றும் கல்லூரிகளில் சரிவர செயல்பட முடியாமல் போகிறது. 16-65 வயது வரை எல்லா வயதினருக்கும் இந்த தொந்தரவு உண்டு. ஆகவே இதனை சிறந்த வழியில் போக்க ஒரு வழி உள்ளது. பருக்களை கீறாமல் கிள்ளாமல் இருப்பது மட்டுமே அதனை போக்க சிறந்த வழி. அதற்கு பதிலாக ஒரு சரும மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker