கவிதைகள்
உயிரே வருவாயா – கவிதை
பிடிக்கவில்லை என்று நீ பிரிந்து சென்றாலும்,
உயிரில் கலந்த காதலை
பிரிக்கமுடியாமல் தினம் சாகின்றேனடி,
உன்னை பார்க்ககூடாது என்று
நான் ஒதுங்கி சென்றாலும் ,
எல்லாம் உந்தன் விம்பமாக மாறி
என்னை தொல்லை செய்யுதடி,
உன்னை நினைக்கக்கூடாது என்று
என்னை நானே வற்புறுத்தினாலும்,
அந்த வலியிலும் உந்தன் நினைவு
தோன்றி என்னை கொல்லுதடி,
இதயத்தில் காயம் இருந்தாலும்,
அதன் இடத்தில் சிறிதும் மாற்றமில்லை,
அதே காதலுடன் உன்வருகைக்காக காத்திருக்கிறேன்,
உயிரே வாருவாயா ………………..