சமையல் குறிப்புகள்

மீல்மேக்கர் வைத்து பிரியாணி செய்யலாம் வாங்க

தேவையான பொருட்கள்

  • பாஸ்மதி அரிசி – 1 கப்
  • மீல்மேக்கர் – 1 கப்
  • உப்பு – தேவைக்கு
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 2
  • மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
  • இஞ்சி-பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
  • பட்டை தூள் கிராம்புத் தூள் சோம்பு தூள் – தலா 1/4 டீஸ்பூன்
  • பிரிஞ்சி இலை – சிறிது
  • புதினா கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி
  • நெய் + எண்ணெய் – 2 டேபிஸ்பூன்.




செய்முறை

  • வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

  • கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு மீல்மேக்கர் அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  • சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி.
  • வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.





Related Articles

Close