சமையல் குறிப்புகள்
முட்டை சாலட் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
- முட்டை – 5
- மயோனைஸ் – 4 டேபிள் ஸ்பூன்
- வெங்காயத் தாள் – 1 குச்சி
- பார்ஸ்லி – 1
- மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
- மாங்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
- கோதுமை பிரெட் – 8 துண்டுகள்
- தக்காளி – 1
செய்முறை:
- பிரெட்டை டோஸ்ட் செய்து கொள்ளவும்.
- முட்டையை வேக வைத்து ஒட்டை நீக்கி வைக்கவும்.
- வெங்காயத்தாள், பார்ஸ்ஸி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பௌலில் மயோனைஸ், வெங்காயத் தாள், பார்ஸ்லி, உப்பு, மிளகு, எலுமிச்சை சாறு மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் வேக வைத்த முட்டைகளை துண்டுகளாக்கி போட்டு, பிரட்டிக் கொள்ள வேண்டும்.
- பின்னர் டோஸ்ட் செய்த ஒரு கோதுமை பிரெட் துண்டை எடுத்து, அதன் மீது அடித்து வைத்துள்ள கலவையை பரப்பி, பின் அதன் மேல் தக்காளி சிறிது தூவி, மற்றொரு பிரெட் கொண்டு மூட வேண்டும்.
- இதேப் போன்று அனைத்து பிரெட் துண்டுகளையும் செய்தால், முட்டை சாலட் சாண்ட்விச் ரெடி