சமையல் குறிப்புகள்
தித்திக்கும் பனங்கிழங்கு பாயாசம்
தேவையான பொருட்கள் :
- பனங்கிழங்கு – 4
- தேங்காய்ப்பால் – ஒரு கப்
- பனை வெல்லக் கரைசல் – அரை கப்
- ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
- நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை – தேவையான அளவு
- நெய் – ஒரு ஸ்பூன்.
செய்முறை:
- பனங்கிழங்கை முழுதாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெளியில் உள்ள தோல் பகுதியையும், உள்ளே உள்ள தண்டு பகுதியையும் நீக்கி விட வேண்டும். இதனை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- வாணலியில் நெய்யை சேர்த்து சூடானதும் பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடிபிடிக்காதவாறு 3 நிமிடம் வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்க வேண்டும்.
- அதனுடன் பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதித்து வரும் போது இறக்கிக் கொள்ளலாம்.
- கொஞ்சம் சூடு தணிந்த பின்பு தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கலக்கி பரிமாறவும்.
- தித்திப்பான பனங்கிழங்கு பாயாசம் ரெடி.