சமையல் குறிப்புகள்

வீட்டில் பாஸந்தி செய்வது எப்படி?

தேவையா பொருட்கள் :

  • பால் – அரை லிட்டர்
  • கண்டென்ஸ்டு மில்க் – கால் கப்
  • சர்க்கரை – கால் கப்
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு
  • பாதாம் – 6 (நறுக்கவும்)
  • முந்திரி பருப்பு – 10 (நறுக்கவும்)
  • பிஸ்தா – 6 (நறுக்கவும்)
  • குங்குமப்பூ – 5 பிசிறுகள்




செய்முறை:

  • பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சிக்கொள்ளவும்.
  • பின்னர் அதனுடன் கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் வைத்து கிளறிக்கொண்டே வரவும்.
  • அப்போது பாலாடை உருவாக ஆரம்பிக்கும். பால் கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • பால் நன்கு கெட்டியானதும் இறக்கவும்.
  • அதனுடன் பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா, ஏலக்காய் தூள், குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி ஒரு பாத்திரத்தில் ஊற்றி பிரிட்ஜ்ஜில் குளிர வைத்து பருகலாம்.
  • சூப்பரான பாஸந்தி ரெடி.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker