சமையல் குறிப்புகள்

ப்ரோக்கோலி வெஜிடபிள் சாலட்

தேவையான பொருட்கள்

  • ப்ரோக்கோலி – 1
  • கேரட் – 2
  • சிகப்பு குடைமிளகாய் – 1
  • முள்ளங்கி – 1
  • வெங்காயம் – 1
  • பாதாம் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகு தூள் – சிறிதளவு




அலங்கரிக்க

  • ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
  • சோயா சாஸ் (coconut aminos or Tamari Soy Sauce) – 1 டீஸ்பூன்
  • சைஸ் வினிகர் – அரை டீஸ்பூன்
  • இஞ்சி – சிறிய துண்டு
  • பூண்டு – 2 பல்

செய்முறை

  • ப்ரோக்கோலி நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • கேரட், குடை மிளகாய், வெங்காயம், முள்ளங்கியை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
  • பாதாமை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • அலங்கரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து கொதிக்க ஆரம்பித்ததும் ப்ரோக்கோலியை போட்டு 30 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த தண்ணீரில் போட்டு எடுத்து வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ப்ரோக்கோலியை போட்டு அதனுடன் நறுக்கிய கேரட், குடை மிளகாய், மிளகு தூள், வெங்காயம், உப்பு, முள்ளங்கியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  • அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு நன்றாக கலந்து கடைசியாக நறுக்கி வைத்துள்ள பாதாமை தூவி பரிமாறவும்.
  • அருமையான ப்ரோக்கோலி வெஜிடபிள் சாலட் ரெடி.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker