சமையல் குறிப்புகள்
வெயிட் லாஸ் சாலட்
தேவையான பொருட்கள்
- முட்டைக்கோஸ் – ½ கப்
- வெள்ளரி – 1
- கேரட் – 1
- உருளைக்கிழங்கு – 2
- குடைமிளகாய் சிறியது – 1
- முந்திரி – 15
- இந்துப்பு – சிறிதளவு
- மிளகுத் தூள் – சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- பூண்டு – 2
செய்முறை :
- முட்டைகோஸ், வெள்ளரி, கேரட், குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 15 முந்திரியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, அதில் 2 பூண்டு, சிறிது இந்துப்பு சேர்த்து நீர் ஊற்றி பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் விரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை போட்டு அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து, அதில் இந்துப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- கடைசியாக அரைத்த முந்திரி பேஷ்டை சாலட் மேல் டாப்பிங்காக ஊற்றிக் பரிமாறவும்.
- அவ்வளவுதான் சுவையான வெயிட் லாஸ் சாலட் தயார்.