சமையல் குறிப்புகள்
சத்தான ஸ்நாக்ஸ் காளான் பஜ்ஜி
தேவையான பொருட்கள் :
- பட்டன் காளான் – 15,
- கடலை மாவு – அரை கப்,
- கார்ன்ஃப்ளார் – 1 டேபிள் ஸ்பூன்,
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்,
- மைதா – 1 டேபிள் ஸ்பூன்,
- சீரகத்தூள், மிளகாய்த் தூள் – தலா 1 டீஸ்பூன்,
- உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
செய்முறை :
- காளானை நன்றாக சுத்தம் செய்து இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கார்ன் ஃப்ளார், அரிசி மாவு, மைதா, சீரகத்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- இதில் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்து கொள்ளுங்கள்.
- காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்துப் பரிமாறுங்கள்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காளானை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- சூப்பரான காளான் பஜ்ஜி ரெடி.