சமையல் குறிப்புகள்
பீட்ரூட் மாதுளம் பழம் சூப்
தேவையான பொருட்கள் :
- மாதுளை முத்துக்கள் – ஒரு கப்,
- மாதுளைத் தோல் – கால் கப்,
- துருவிய பீட்ரூட் – கால் கப்,
- தக்காளி – 2,
- கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – 2 டீஸ்பூன்,
- வெண்ணெய் – அரை டீஸ்பூன்,
- கிராம்பு – 2,
- மிளகுத்தூள்,
- உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
- மாதுளைத் தோல், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்,
- மாதுளை முத்துக்கள், மாதுளைத் தோல், துருவிய பீட்ரூட், நறுக்கிய தக்காளியை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயை சேர்க்கவும்.
- கிராம்பு, கார்ன்ஃப்ளார் சேர்த்து லேசாக வறுக்கவும்.
- அரைத்த மாதுளை விழுது, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- எல்லாம் சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்து, பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும்.
- உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
- பீட்ரூட் மாதுளம் பழம் சூப் ரெடி.