சமையல் குறிப்புகள்
குழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை பூரி
தேவையான பொருட்கள் :
- கோதுமை மாவு – 2 கப்,
- பசலைக்கீரை – 2 கட்டு,
- சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
- பச்சை மிளகாய் – 2,
- மிளகாய்த்தூள், சர்க்கரை – தலா அரை டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை போட்டு சிறிது நேரம் வதக்கிய பிறகு ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து) மிருதுவான பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
- பிறகு மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- சுவையான சத்தான பசலைக்கீரை பூரி ரெடி.