சமையல் குறிப்புகள்

சத்தான ஸ்நாக்ஸ் கோதுமை தட்டை

தேவையான பொருட்கள் :

  • கோதுமை மாவு – 2 கப்
  • அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • வெண்ணெய் – சிறிதளவு
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு




செய்முறை:

  • கடலைப்பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.
  • அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவை கொட்டி அதனுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், கடலைப் பருப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
  • அதனை சிறு உருண்டைகளாக்குங்கள்.
  • உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து அழுத்தி மெலிதாக தட்டைபோல் ஆக்கி கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த தட்டைகளை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
  • சுவையான கோதுமை தட்டை ரெடி.
  • இந்த தட்டையை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker