சமையல் குறிப்புகள்
தீபாவளி ஸ்பெஷல்: நெய் பால் கேக்
தேவையான பொருட்கள்
- நெய் – 3 தேக்கரண்டி
- எழுமிச்சைசாறு – 2 தேக்கரண்டி
- சர்க்கரை – ¾ கப்
- பால் – 1½ லிட்டர்
- அலங்கரிக்க – பாதாம், பிஸ்தா
செய்முறை:
- பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு நான்ஸ்டிக் ஸ்டிக் கடாயில் ஒன்றரை லிட்டர் பாலை ஊற்றி அதை மிதமான சூட்டில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அடிப்பிடிக்காமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
- இரண்டு மணி நேரத்திற்கு பிறகு திரட்டுப்பால் போல் பாலானது திரண்டு வரும். அதில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து மறுபடியும் கிளற வேண்டும். இப்பொழுது முக்கால் கப் சர்க்கரையை சிறிது சிறிதாக கலந்து கிளற வேண்டும்.
- பால் திரட்டானது சர்க்கரை சேர்த்தவுடன் இளகி மறுபடியும் கெட்டியாகும் வரை கிளற வேண்டும். இப்பொழுது நெய்யையும் ஊற்றி கிளற, கிளற நன்கு திரண்டு வரும். பின்பு ஒரு ட்ரேயில் நெய் தடவி இந்தப்பால் திரட்டை அதில் கொட்டி சமப்படுத்தி வைக்க வேண்டும்.
- இந்த கலவையை அறை வெப்பத்திலேயே நன்கு ஆறவிட்டு விட வேண்டும். நன்கு ஆறிய பின்பு இவற்றை வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போட்டு அதன் மேல் பாதாம், பிஸ்தா வைத்து அலங்கரிக்கலாம்.